13
சாந்தியின் சிகரம்
நமக்கு வேண்டாம். வேண்டுமாயின், அக்கா மகளையே கொடுக்கட்டும்—என்று முற்றுப் புள்ளி வைத்துக் கூறினாள். தம்பதிகளின் இதயங்களில், தம் மகளுக்கு ஆபத்து நீங்கி, குணமுண்டாகியதே என்கிற சந்தோஷம் பொங்குவதை விட்டு, 50 ரூபாய் போய் விட்டதே என்ற துக்கந்தான் அதிகமாய் பாதித்தது!
3
டாக்டர் சந்தோஷத்துடன் வெளியே வந்தவர், நேராக தர்ம வைத்யசாலைக்கு வழக்கம் போல் சென்றார். இவர் வரவுக்காக, ஏராளமான நோயாளிகள் காத்திருப்பவர்களை எல்லாம் ஒரு முறை பார்த்துத் தனது ஆதரவைக் காட்டி, மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு, அந்த ஸ்தாபனத்தின் மானேஜராகிய ராமனைக் கூப்பிட்டு, “ஸார்! எந்தெந்த மருந்துகள் ஆய் விட்டதோ, அதன் ஜாபிதாவைக் கொண்டு வாரும், எழுதிக் கொடுக்கிறேன். இதோ 500 ரூபாய்! இதைக் கொண்டு போய், மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்து வையும்; இவ்வாரத்தில் பெரிய மனிதர்களின் வீட்டில் கிடைத்த துகை இது; இந்தாரும்” என்று கூறி, 500 ரூபாயைக் கொடுத்து, மருந்துகளின் ஜாபிதாவின்படி எழுதிக் கொடுத்து விட்டு, வழக்கப்படி சில நோயாளிகள் வீடுகளுக்குச் சென்று பார்த்துப் பின்பு வீட்டிற்குத் திரும்பி வந்தான்.
தன் தாயாருடன் யாரோ பேசிக் கொண்டிருப்பது கண்டு தான் வந்தது தெரியாமல், தன் விடுதிக்குச் செல்லப் போகும் வழியில், தன் தாயார் விசும்பி, விசும்பி அழும் குரலும், அதற்கு மிக மெல்லிய குரலில் சமாதானம் கூறும் வார்த்தையும் காதில் பட்டதும், தன்னையறியாத விதம், அவ்வறையின் ஜன்னலுக்கருகில் சென்று நின்று கவனிக்க வாரம்பித்தான்.
கமலவேணி:-நிஜமாகவா நீங்கள் சொல்கிறீர்கள்? என்னால் நம்பவே முடியவில்லையே ! என் செல்வ மகனா இப்படிப்பட்டவன்?