155
சாந்தியின் சிகரம்
மனிதர்களே பார்த்துச் செய்த சிறையில், மனிதர்களாலேயே அடைக்கப்பட்ட இந்தச் சரீரத்தை மட்டும் மதித்து அனுதாபப்படுகிறீர்களே! அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய், சர்வ வ்யாபியாய் இருக்கும் எம்பெருமானின் சொந்தப் பொருளாகிய நமது ஆத்மா, பகவானால் செய்யப்பட்ட சரீரமென்கிற சிறையில் அடைப்பட்டு, விடுதலை பெற முடியாது தவிக்கின்றதே! அதைப் பற்றி இவ்வுலகத்தில் யாராவது ஒரு கடுகளவேனும் சிந்தித்துப் பார்க்கிறார்களா? அந்தச் சிறையிலிருந்து விடுதலையானால், சகல மோட்ச சாம்ராஜ்யத்தையும் பெறலாம்…
இந்தச் சிறையைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேணும் ஸார்? நான் இதை மிக மிக மகிழ்வுடன் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேனே. இதற்காக நான் ஏன் ஸார் கவலைப்படப் போகிறேன்? நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடம், சிபார்சுகளில் பல்லை இளிக்க, நான் தயாராயில்லை. நிம்மதியான, ஆனந்த நிலைமையில், இந்த இடத்தில்தான், சாந்தியின் சிகரத்தை எட்டிப் பேரின்பத்தை யடைய முடியும். ஆகையால்தான், சந்தோஷமாயிருக்கிறேன். எனக்காக, எத்தகைய ப்ரயத்தனமும், யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது என் வேண்டுகோள். என்னை நம்பி, நீங்கள் அனுமதித்தால், நான் வைத்தியத் தொழிலில் இங்கு ஸேவை செய்து இன்புறுகிறேன். இல்லையேல், கல்லை உடைக்கச் சொன்னாலும் சரி, கட்டை வெட்டச் சொன்னாலும் சரி, தயாராக இருக்கின்றேன்—என்று ஏதோ அபரிமிதமான சந்தோஷத்தை யடைந்தவன் பேசுவது போல், சொல்லும் மன உறுதியைக் கண்ட ஜெயிலர் அசையாது நின்று பின், “ஸார்! பிறகு வந்து உம்மைப் பார்க்கிறேன்” என்று கூறி, மற்றொரு கைதியிடம் சென்றார்.
வழக்கம் போல், அக்கைதி புலம்பித் தவிப்பதும், தனக்கு எப்படியாவது அப்பீல் செய்து விடுதலை வாங்கித் தர வேண்டும். என்று கதறியதோடு, தன் குடும்பத்தில்