பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

சாந்தியின் சிகரம்

குளுகுளுவென்றிருந்த உன்னுடைய உள்ளத்தில் மகாபாவியாகிய நான்…”

“அம்மா! நிறுத்துங்களம்மா! சோலைவனமாவது? பாலைவனமாவது? இம்மாதிரி இனி பேச வேண்டாம், தாயே! என்னுடைய நல்ல காலத்தின் புண்ணிய வசத்தினால், அவிந்து போகவிருந்த என் கண்கள் ப்ரகாசம் பெற்றுப் புனிதமாகியது கண்டு நான் பூரிக்கின்றேன். அத்தகைய சன்மார்க்கத்தைக் காட்டிய உங்களையா நான் நொந்து கொள்வேன்? எதற்காக நீங்கள் இம்மாதிரி நினைக்க வேண்டும்? தாயை மகனும், தங்கையை அண்ணனும் மணக்க நாம் என்ன ம்ருக ஜாதியா? அம்மா! இந்த மாதிரி எண்ணத்தையே நீங்கள் இனி விட்டுவிட வேண்டும். நான் இன்று முக்யமான ஒரு விஷயத்தையே கூற வந்திருக்கிறேன். அதாவது: என் படாடோபத்திற்கெல்லாம் ஆஸ்பதமாயிருந்த ஆடையாபரணங்களை எல்லாம் ஒருமுறை எடுத்துப் பார்த்தேன்!…

தாயே ! என்னையே நான் வெறுத்துக் கொண்டு, உண்மையில் கண்ணீரே விட்டேன். எத்தனையோ கோடிக் கணக்கான மக்கள் அன்றாடம் கஞ்சிக்கில்லாமல் பஞ்சாய்ப் பறக்கும் நிலைமையை அடியோடு மறந்து, எனது நாற்றச் சரீரத்தை அழகு படுத்தவும், அதைக் கண்டு பிறர் மனம் சலிக்கவுமான பாதகத்தையல்லவா செய்தோம்!.. என்று மனது துடித்தது…

உடனே அவைகளை மானங்கெட்ட தாசி வகுப்பில் உள்ள சிலருக்கு விற்றுப் பணமாக்கியதில், 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதை உங்கள் மூலமாக அண்ணாவின் அனாதை நிலயத்திற்குக் கொடுத்து விட்டு, உங்களையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். அதோடு பெரிய அண்ணனைச் சிறையில் சென்று அம்மாவும், நானும் பார்க்கப் போகிறோம்—அதற்காக உத்திரவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். ஒருவேளை நீங்களும்