பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

சாந்தியின் சிகரம்

இல்லை! உங்கள் பிதாவின் மிகவும் கீழ்த்தரமான போக்கிற்கு, அந்த ஆபாஸ மனிதனின் வயிற்றில் இத்தகைய பரிசுத்தாத்மாக்களாயும், த்யாகச் சுடராயுமுள்ள அண்ணனும் தங்கையும் எப்படித்தான் பிறந்தீர்களோ!…என்று நான் வியக்கிறேன். உங்கள் லட்சியமும், ஈடேறி வெற்றி பெற வேண்டும்… தாமூ! என்ன விஷயம், நீ சொல்ல வந்தது; அதைச் சொல்லு.

தாமு :- இது வரையில், அண்ணாவைப் பார்க்க வேண்டுமென்று கேட்டதற்கு, அண்ணா ஒரே பிடிவாதமாய்க் கண்டிப்பாய்த் தன்னை யாரும் பார்க்க வேண்டாம்; உத்திரவு கொடுக்க வேண்டாம் என்று ஜெயில் அதிகாரிக்குத் தெரிவித்து விட்டார். நானும் மாதாமாதம் அவரைப் பார்க்க வேண்டுமென்று போடுகிற விண்ணப்பத்தை நிறுத்தாமல் போட்டுக் கொண்டே வந்தேன். இதோ கடிதம் ஜெயிலரிடமிருந்து வந்திருக்கிறது: அண்ணா நம்மைப் பார்க்க இசைந்திருக்கிறாராம். வரும் போது, உஷாவையும், லேடி டாக்டர் துளஸிபாயையும் அழைத்து வரும்படியாக. அண்ணாவே எழுதச் சொன்னார்களாம். இதை விட, நல்ல சமாசாரம் நமக்கு வேறென்ன இருக்கிறதம்மா?…

என்று முடிப்பதற்குள், உஷா சிறு குழந்தையைப் போல் ஒரு துள்ளு துள்ளி குதித்து, “அடடா ! பழம் நழவிப் பாலில் விழந்தது போல் இருக்கிறதம்மா! என்றைக்குப் போகலாம்? இன்றே புறப்படலாமா?” என்று வெகு ஆர்வத்துடன் கேட்டாள்.

கமலவேணியம்மாளுக்கு மட்டும் தன் மகனைப் பார்க்கப் போகிற சந்தோஷத்தை விட, அவனை ஒரு கைதியாய் சிறையில் எப்படிப் போய்ப் பார்த்துச் சகிப்பது? என்கிற மகத்தான துக்கந்தான் பீறிக் கொண்டு வந்து விட்டதால், குலுங்கக் குலுங்க அழுது விட்டாள். கோர்ட்டில் தீர்ப்புச்

சா—16