பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

164

அவர்களிலேயே இன்னொருவன்… “டேய்! நாம்ப படிக்காத முட்டாளு; அவரு படித்த முட்டாளு! அவ்வளவுதானேடா?” … என்று எளனமாய்ச் சொல்வான்.

இதை விட துடுக்கான இன்னொரு அஸல் கொலைகாரன்… “அட!… இவரு டாக்கட்டருன்ன மொறெலெ தண்டனே இல்லாமே எத்தினியோ கொலை பண்ணியிருப்பாரு! அந்தக் கைப்பழக்கம் இப்படி ஒன்னு சாம்பலு (ஸாம்பில்) பாத்துட்டாரு…” என்று மிகவும் அலட்சியமாய்ச் சொல்லும் போது, இந்தக் கைதிகளை மேய்க்கும் மேஸ்த்ரியும், ஹெட்வார்டரும் இதைக் கேட்டுக் கொண்டே வந்து, தங்கள் கையிலுள்ள தடியினால் அவர்களை நன்றாக அடித்தார்கள்.

இதைக் கண்ட ஸ்ரீதரன் பரிதாபத்துடன், “அப்பா! வார்டர்! அடிக்காதே! அவர்கள் சொல்வதில் குற்றமென்னப்பா? உலகத்தில் பெரும்பாலான மனிதர்களின் போக்கும், எண்ணமும், அறிவு வளர்ச்சியும் இவ்வளவுதானேப்பா! இது தெரியாமல் ஏன் அடிக்கிறாய்? அவர்களைப் போன்ற—அவர்களுக்குச் சமமான—ஒரு கைதியாகவே, தற்சமயம் நான் அவர்களுடைய கண்களுக்குக் காணப்படுவதால், அப்படித்தானே சொல்வார்கள். பாவம்! அறிவிலிகளை அடிக்காதேப்பா” என்று பரிந்தும், பரிதாபகரமாயும் சொல்வதைக் கேட்ட கைதிகளே ஒரு மாதிரியாய் ஆய் விட்டார்கள். வார்டரை ஏமாற்றி விட்டு வந்த குற்றத்துடன், இப்படி அவமரியாதையாய்ப் பேசிய குற்றம் ஆகிய இரண்டுக்கும் தண்டனையைச் சட்டப்படி விதிக்கப்பட வேண்டியதை அதிகாரத்துடன் அதட்டிக் கூறியபடி, அவர்களைத் தள்ளிக் கொண்டு போவதைக் கண்ட ஸ்ரீதரன் இதயத்தில், அது சுருக்கென்று பொத்தியது.

அவன் நயமான குரலில் ஹெட்வார்டரைக் கூப்பிட்டு, “ஐயா! உங்களை நான் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். என் தலைவிதியின் நிழல், அந்த அபாக்யப்