பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு. கோ.103-வது நாவல்

166

வேண்டாம்! சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்தும் மகாராணி, தான்தான் என்கிற அகம்பாவத்துடன் மருமகளை நடத்தும் புண்யவதிகளின் சரித்திரமோ சொல்ல சாத்யமில்லை! சரி!… இனி இப்படியே பார்த்துக் கொண்டு போனால், ஆயிரக்கணக்கான விசித்திரங்கள் கிடைக்கும்… அடாடா! என்ன ஆச்சரியமான உலகம்!… என்று ஸ்ரீதரன் தனக்குத் தானே நினைத்துக் கொண்டு, வியப்பே வடிவாய் நின்றிருந்தான்.

அதே சமயம், வெளிப்புறத்தில் கைதிகள் எல்லோரும் கட்டை வெட்டும் இடத்தில், ஒரே கூச்சலும், பரபரப்பும், அலறலுமான சத்தமும் கேட்டு வார்டர்கள் ஓடினார்கள். “என்னமோ தெரியவில்லையே! இந்தக் கைதிகளை, அந்த வெட்ட வெளியிடத்தில் கொண்டு போய், (பனிஷ்மெண்ட்) தண்டனை கொடுக்கிறார்களா, என்ன? அதைக் கண்டு, மற்ற கைதிகள் இத்தகைய கூக்குரலிடுகிறார்களா? ஒன்றும் தெரியவில்லையே! ஐயோ பாவமே! அம்மாதிரி கைதிகளை அடிப்பதாயிருந்தால், அந்த பாதகத்திற்குக் காரணம் நானல்லவா? கடவுளே! என் புத்தி தெரிந்த நாளாக, நான் ஒருவிதமான குற்றமும் செய்தறிய மாட்டேனே; அங்ஙனமிருக்க, என்னை முன் வைத்து, அந்த நிரபராதிகளுக்கு இத்தகைய கொடிய தண்டனை கொடுக்கலாமா? அவர்கள் உள்ளம் என்னையல்லவா சாபமிடும்; எப்போதும், என் உள்ளத்திலேயே நீ வீற்றிருக்கிறாயே! இந்த பாதகத்தை நீயும் கண்டு சகிக்கலாமா?… என் உள்ளம் இப்போது துடிக்கும் துடிப்பில், நான் ஒரு பறவையைப் போல் சிறகுள்ளவனாய்ப் பறந்து சென்று, அந்த அதிகார தேவதைகளான வார்டரின் காலில் விழுந்து, மன்னிப்புக் கோருவேனே! என்ன செய்வேன்?…

இந்த சமயந்தான் என்னுள்ளத்தில், இன்னொரு தத்துவம் நன்றாகப் புலப்படுகிறது. மனிதன் செய்யும் அக்ரமங்களை—பாவங்களை—சகிக்காமல், ஆத்மா இப்படித்-