பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

சாந்தியின் சிகரம்

வும், ஒரு பெண்ணை டாக்டராகவும் படிக்க வைத்திருக்கிறாளாம்…

கமல:- என்ன ! என்ன ! தேவதாசிப் பெண்களையா இப்படிப் பழக்கி இருக்கிறாள்? டாக்டராக வேலை செய்கிறாளா? அல்லது இப்போதுதான் படிக்கிறாளா?…

கிருஷ்:- வேலை பார்க்கிறாளாம்; ப்ரஸவ ஆஸ்பத்ரியில் அவள் டாக்டராம்; அவளுக்கு அபாரமான புகழாம்; கைராசிக் காரியாம்; நல்ல அழகியாம்; தொழில் முறையில்தான் அவளிடம் பழகுகிறானோ? அல்லது…

கமலவேணியினால் இதைச் சற்றும் தாங்க முடியாது, விம்மி விம்மி அழத் தொடங்கினாள். ஆதியில் தன் கணவன், இத்தகைய துர்ச்செய்கையின் விளைவினாலேயே, சகல விதத்திலும் கெட்டுப் பாழாகிக் கடைசியில் தாய் நாட்டையும் விட்டு ஓடி மறைந்த பயங்கர சம்பவம் அவள் கண் முன்பு படம் போல் சுழன்று, இதயத்தைத் தாக்கியதால், அப்படியே கண்களை மூடியவாறு சாய்ந்து விட்டாள்.

அதே சமயம், கமலவேணியின் சிறிய குமாரன் அங்கு வெகு படபடப்புடன் வந்து, “அம்மா சற்று முன் நான் சொல்லியதை நீ நம்பாது, என்னையே எதிர்த்தடித்துப் பேசினாயே ! இதோ உன் ஆப்த சினேகிதையே சொல்வதைக் கேட்டாயா? நானும் வெளியில் நின்று கவனிததுத்தான் வந்தேன். அண்ணா வர, வர வெகு மோசமான நிலைமையில் இறங்கி விட்டதைக் கண்டித்துத் திருத்த வழி தெரியாமல், அவனுக்காக என் வாழ்நாளையும். பாழ் நாளாக்குகிறாயே! இது எந்த வீட்டில் நடக்கும் அம்மா! முதலில், நான் விரும்பும் பெண்ணை எனக்கு மணம் செய்து வைத்து, எனக்குள்ள சொத்துக்களை உடனே பாகம் செய்து கொடுத்து விடவேண்டும் தெரிந்ததா? இவனுடைய வீண் அட்டகாஸ ஆடம்பரச் செலவிற்கும், ஊதாரித் தனத்திற்கும் நான் இடங் கொடுக்க முடியாது. இக்-