பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

சாந்தியின் சிகரம்

நிறைதானே! அவன் செத்தால் முழுகி விட்டதா என்று சொன்னோமே; அதைப் போலத்தானே இவனும்; இதை உணராது, வைத்யம் செய்வதாகக் கூறுகிறான். மடையன்!… என்றுதானே எண்ணிச் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டதும், வார்டர் சற்று திடுக்கிட்டு நின்றான். “நான் அப்படி நெனச்சு சொல்லலீங்க; கைதியாயிருக்கறப்போ, ஒங்களே வைத்யம் செய்ய உடமாட்டாங்க. அப்படி இருக்கச்சே, நீங்க கேக்கறீங்களேன்னு நெனச்சேன்… சிரிப்பு வந்திடுச்சுங்க” என்றான்.

அதே சமயம், ஹெட்வார்டர் அவசரமாக வந்து, “ஜெயிலர் உங்களைக் கூப்பிடுகிறார்கள்; வாருங்கள்'” என்ற போது, ஸ்ரீதரனுக்கு விவரிக்க இயலாத யோசனைகளே உண்டாகி விட்டன… ‘ஏதோ பெரிய விஷயம் இருப்பதனால்தான், திடீரென்று கூப்பிடுகிறார்கள். அம்மாவுக்கு… தம்பிக்கு… ஏதாவது ஆபத்து வந்து விட்டதா? அன்றி, அனாதை நிலயத்திற்கோ, தர்ம வைத்ய சாலைக்கோ ஏதாவது வந்து விட்டதா?…’ என்ற பெரிய சந்தேகமும், பயமும் தோன்றி வதைக்கிறது… எத்தனை சொல்லியும் கேட்காமல், மேலே அப்பீல் செய்து விட்டுத் தம்பிதான் வந்திருக்கிறானோ?… என்று பல பலவிதமாக எண்ணியபடியே சென்றான். அவன் உள்ளத்தில் மட்டும் அவன் தாயாருக்குத்தான் ஏதோ ஆபத்தான நிலைமை வந்து விட்டது என்று சொல்லப் போகிறார்களோ… என்ற புதிய அதிர்ச்சியான கவலை பாதித்தது.

24

“ஸார்! என் மதருக்கு ஏதாவது ஆபத்தென்று ஆள் வந்திருக்கிறதா? அல்லது தந்தி வந்திருக்கிறதா? ஏனென்றால், என் தாயார் இதய பலவீனப்பட்டவள் ; இந்த அதிர்ச்சியினால், எப்போது அவள் உயிர் போய் விடுமோ?

சா-16