வை. மு. கோ. 103-வது நாவல்
184
களைப் பார்க்கலாம் என்று உத்திரவு கொடுத்திருக்கிறாராம். நானும் கூடப் போகப் போகிறேன். இரவு பகல் சதா காலமும், நீ அவருடைய க்ஷேமத்தையே கோரி ப்ரார்த்தனை செய்வதால், உன்னையும் அழைத்துப் போகலாமென்று நான் தீர்மானித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டேன். ராதா, நீ இதைக் கேட்க மிக மிக ஆனந்தப்படுவாயல்லவா!” என்று அன்பொழுக கேட்டாள்.
எத்தகையோருக்கும் அதிக துக்கம் வந்தாலும், அதிக சந்தோஷம் வந்தாலும் பேச மாட்டாமல், ஒரு விதமான உணர்ச்சியுடன் வாயடைத்து, ஊமையாகிக் கண்கள் நீர் அருவியைப் பொழிய, உணர்ச்சி வயப்பட்டு விடுவது சர்வ சகஜமான ப்ரத்யக்ஷமாகும். பாவம்! அனாதையாய், நிர்க்கதியாய்த் தெருவில் கிடந்த தன்னை, எமனிடம் வாதாடி ஒரு பொருளாக்கி, அளப்பரிய அன்பைக் கொட்டியளந்து, இவ்வுலகத்தில் தானும் உயிருடன் இருக்க அருகதையுண்டு என்கிற நிலைமைக்குக் கொண்டு வந்த வள்ளலை, அனாதையான ராதா கோயிலிலுள்ள தெய்வமாகவே எண்ணி இருப்பதால், இதைக் கேட்ட உடனே வாயடைத்து, மவுனியாகி, ஆநந்தப் பதுமை போல் கண்ணீர் வழியஉணர்ச்சி வயப்பட்டு அப்படியே தம்பித்து விட்டாள்.
சில வினாடிகள் கழித்து, துளஸிபாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு… “தாயே! இந்தப் பாவிக்கு ஆகாயம் போட்டது, பூமி ஏந்திக் கொண்டது என்கிற நிலமைதான் தெரிகிறதேயன்றி, எத்தகைய அன்பும், ஆதரவும் தெரியாது வறண்டு கிடந்த உள்ளத்தில், அன்புப் பயிர் துளிர்த்து, ஆதரவுக் கனியும் குலுங்க வைத்த வள்ளலை நினைக்காமலும், பார்க்காமலும் கூட இருப்பார்களா! எனக்கு ஒன்றுமே சொல்லத் தெரிய-