பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

சாந்தியின் சிகரம்

பக் கூடாதாம். மறுபடியும் மர்ஸி பெடிஷனோ, அப்பீலோ செய்வதாக உத்தேசமே இருக்கக் கூடாதாம். அம்மாதிரி கண்டிஷனுக்கு இணங்குவதாயின், வருகிறாராம். என்ன சொல்கிறீர்கள்?” என்று மரியாதையாய்க் கேட்டார்.

இதைக் கேட்ட எல்லோரும் ஒரு முறை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். கமலவேணி அம்மாளால் பேசவே முடியவில்லை. மவுனமே ஸாதித்து, விக்கி விக்கிப் புலம்புவதைத் தடுக்க வெகு ப்ரயாஸைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். உஷாதான் கமலவேணியைத் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்… “ஸார்! பெத்த வயிற்றின் துடிதுடிப்பு எப்படிப்பட்ட கொடுமையானது என்பது உங்களுக்குத் தெரியாதா! பரோபகாரத்திற்கே பிறந்துள்ள உத்தம கர்ம வீரனை, இத்தகைய படாப்பழியுடன் கம்பிக்குள்ளே பார்ப்பதென்றால், யார் மனந்தான் கரையாது ஸார்! இதைக் கட்டுப் படுத்தவோ, தடுக்கவோ பகவான்தான் அத்தகைய ஒப்புயர்வற்ற மன நிம்மதியை—மறத்த தன்மையைக் கொடுத்து ,சாந்தியின் சிகரத்தில் ஏற்றி விட வேணுமேயன்றி, மனித பாசத்தின் மத்தியில் நினைந்து கொண்டிருக்கும் போது, அந்த நிலை கிட்டுமா. ஏதோ முடிந்த வரையில் எல்லோரும் அண்ணனின் விருப்பப்படியே நடக்கிறோம். தயவு செய்து, அந்த த்யாக பிம்பத்தை அழைத்து வாருங்கள்…” என்று வெகு அழகாகவும், சாந்தமாகவும் பேசினாள்.

தாமோதரனுக்குள்ள உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மெல்ல சமாளித்துக் கொண்டு, “ஸார்! நாங்கள் கண்ணால் பார்த்து, எங்கள் கவலை தீர்ந்தால் போதும். எப்படியும் பகவான் ஒருவன் இருக்-