பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191

சாந்தியின் சிகரம்

இத்தகைய அழகிகளைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு, இந்த மனிதன் சற்றும் சபலமோ, கெட்ட எண்ணமோ இல்லாது, எப்படித்தான் த்யாகத் துறவியாய்— ஜிதேந்திரியனாய்—வாழ்க்கை நடத்துகிறான். இது வெறும் மனித பலம் மட்டும் இருந்தால், போதாது. தெய்வ பலமும், யோக சாதனமும், வைரம் போன்ற உறுதியும் சேர்ந்திருப்பதனால்தான் நடக்க முடிகிறது… என்று தனக்குள் எண்ணி வியப்புற்றார்.

வெகு ப்ரயாஸைப்பட்டு, தன்னுடைய மனக் கொதிப்பை அடக்கிக் கொண்ட கமலவேணியம்மாள்… “தம்பீ! இதற்கு விமோசனம் எப்போ…” என்று தடுமாறியபடியே கேட்டாள்… “அம்மா… விமோசனமா… இப்பொழுது ஏதாவது வ்பரீதம் இருப்பதாக நினைப்பவர்களுக்கல்லவா, விமோசனத்தைத் தேட வேண்டும். எனக்குள்ள நிம்மதியும், சந்தோஷமும் சொல்லி முடியாதம்மா! இந்த மகானுபாவர் கருணை கூர்ந்து, இங்கும் ஸேவை செய்ய எனக்கு அனுமதியளித்து விட்டதால், இனி சொர்க்கப் பதவி வேண்டாம். அடிக்கடி முடிந்த போதெல்லாம், உங்களைப் பார்க்கிறேன் … தாமூ! என்னப்பா யோசனை செய்கிறாய் …” என்று தானே ஏதோ பேசி, வார்த்தைகளை மாற்றிப் பார்த்தான்.

தாமு:-அண்ணா! ஏதேதோ பேச வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டு வந்தேன். ஆனால், தொண்டையை அடைத்து விட்டது. பேசவே தெரியவில்லை!.. உஷா தன்னுடைய ஆடையாபரணங்களை எல்லாம் விற்று, 25 ஆயிரம் ரூபாய் இந்த ஸ்தாபனங்களுக்காக நன்கொடை கொடுத்தாள். அதைத் தவிர, தேவதாசிகளில் உத்தமிகளாயிருப்பவர்களிட மெல்லாம் நிதி திரட்டி, உஷாவின் தாயார் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். உன்னுடைய ஆப்த சினேகிதர்கள்