பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

192

சிலர் பணமனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். நமது சொத்திலும்,பெரும் பாகத்தை இதற்கே செலவு செய்வதென்று தீர்மானித்துச் செய்து வருகிறேன். இரண்டு ஸ்தாபனங்களும் வெகு நன்றாக நடக்கின்றன. ஆனால்,

சந்திரனில்லா வானம், தாமரை இல்லாப் பொய்கை
மந்திரி இல்லா வேந்தன், மதகரி இல்லாச்சேனை
மந்திரமில்லா மறைவன், மாதர்களில்லா மனைகள்
தந்திகளில்லாவீணை, தாயில்லாக் குழவி போலாம் …

என்கிற பாடல் படி நீ இல்லாத எந்த இடமும் சகலமும் பாழாகவே தோன்றுகிறது. அண்ணா! இந்தப் படுபாவி தம்பியின் பொருட்டல்லவா, உனக்கு இக்கதி நேர்ந்தது. இந்த பாவத்தை நான் எப்படி… எங்கு போய்த் தீர்ப்பேன்…” என்று கூறும் போது, துக்கம் தாங்காமல், இதயத்தைப் பிளந்து கொண்டு வந்து விட்டது.

ஸ்ரீதரன் தாமோதரனைச் சேர்த்தணைத்துக் கொண்டு, “தம்பீ! கலங்காதே… எல்லாம் நன்மைக்கே என்ற பாடத்தின் உண்மையை, நாம் இப்போது நிதர்சனமாக அறிகின்றோம்… மனத்தைத் தளர விடாதே… சகலத்தையும் பகவானின் திருவடிகளில் போட்டு, நம்பிக்கையுடன் காரியத்தைச் செய். வீணாக வருந்தாதே.” என்று தேறுதல் கூறினான். ஜெயிலர் முகத்தைப் பார்த்தான்: நேரமாகி விட்டது என்று தெரிவிக்கிறாரா என்று அறியவே பார்த்தான் என்பதை உணர்ந்த ஜெயிலர், “ஸார்! பயப்பட வேண்டாம். நீர் வந்து இத்தனை நாளைக்காக, இன்றுதான் உமது மக்கள், மனிதர்களைப் பார்ப்பதால், மணி கணக்குக்குக் கட்டுப்பட வேண்டாம். நான் உத்திரவு கொடுக்கிறேன். பயப்படாமல் பேசும்,” என்றார்.