பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

194

அறிந்து, அதை ஜெயிலரிடம் தெரிவிக்க உள்புறம் ஓடினான்.

இதையே ஒரு நல்ல சமயமாக எண்ணிய ஸ்ரீதரன், தன் தாயாரின் காதோடு மிக ரகஸியமாய்… “அம்மா! ஒரு அதிசயம். வெகு நாட்களாகப் பிரிந்துள்ள என் பிதா, இதே சிறைச்சாலையில் கொலைக் கைதியாயிருக்கிறார். அவருக்கு ஏதோ விபத்து நேர்ந்து விட்ட சமயம், என் கையினால் நானே வைத்தியம் செய்து என் ரத்தத்தைக் கொடுத்து, என் கடமையைச் செய்தேன். இந்த விஷயத்தை வெளியில் சொல்லாதே. என்னை இன்னாரென்று அவருக்குத் தெரியாது. ஏதாவது விசேஷமிருந்தால், அதையொரு சிறுகதை போல் கடித மூலம் எழுதியனுப்புகிறேன். வீட்டிற்குப் போன பிறகு தம்பி, தங்கை, சின்னம்மா, முதலியவர்களிடம் சொல்லுங்கள். உங்கள் ஸௌபாக்யத்திற்குக் குறைவு வராமல் காக்கும்படி பகவானை ப்ரார்த்திக்கின்றேன்.”

என்று சொல்லியதைக் கேட்ட கமலவேணியம்மாளுக்கு இன்னதென்று கூறத் திறமற்ற வியப்பும் திகைப்பும் உண்டாகி விட்டது… ஏதோ சொல்வதற்கு வாயெடுத்தாள். அதை நோக்கமறிந்து, அப்படியே ஜாடை காட்டி அடக்கி விட்டுத் தான் கூண்டினருகில் போய் நின்று விட்டான்.

தன் தாயுடன் அண்ணன் என்ன சொல்லி இருப்பான் என்று அறியாத தாமோதரனுக்குப் பெரிய யோசனையாகி, அதைப் பற்றியே நினைத்திருக்கையில், ஜெயிலர் வந்து விட்டார். ஸ்ரீதரன் வெகு மரியாதையுடன் பேசாமல் தூர நிற்கும் பெருந் தன்மையைக் கண்டு பூரித்த ஜெயிலர்… “ஸார்… இனி நேரமாகி விட்டது. வேறு கைதிகள் வந்திருப்பதால், நான் வெளியே போக