பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195

சாந்தியின் சிகரம்

வேண்டும். எப்போதும் கைதிகளின் இண்டர்வ்யூவுக்கு நான் வருவதே வழக்கமில்லை. உங்களிடம் நான் கொண்டுள்ள நன்மதிப்பினால், இன்று வந்தேன்… அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பி விடுங்கள்!” என்று மரியாதையாய்க் கூறினார்.

“தம்பீ! எல்லோரும் போய் வாருங்கள். அடிக்கடி பார்க்க வேணும் என்கிற ஆசையை விட்டு விடுங்கள். பகவானை நம்பி, அவனிடம் பக்தி செய்து, பேறு பெறுங்கள். ஆச்ரமத்து குழந்தைகளுக்கும், ஆஸ்பத்ரி நோயாளிகளுக்கும் எனது ஆசிகளைக் கூறுங்கள்.” என்று கூறி விட்டு சடக்கென்று உள்ளே போய் விட்டான்.

ஒரு மகத்தான லக்ஷ்ய புருஷனின் கம்பீர தோற்றம் பரிபூர்ணமாய்க் குடி கொண்டிருப்பதைக் கண்ட ஜெயிலரே, மறுபடியும் ப்ரமித்துப் போனார். ‘உம்! தாமரை இலைத் தண்ணீர் போன்ற மனிதப் பிறவி இவர்!’ என்று அவருடைய அந்தரங்கத்தில் ஏதோ ஒன்று சொல்லியது.

26

ட்டுக்கடங்காத ஒரு பெருமிதமான உணர்ச்சி கமலவேணியம்மாளின் நெஞ்சில் அலை மோதுகிறது. இந்த அபரிமிதமான சந்தோஷத்தை எப்போது தாமோதரனிடமும், உஷாவிடமும் சொல்லிக் களிக்கப் போகிறோம் என்று ஆவல் துடிதுடிக்கின்றது. ஆனால், கூடவிருக்கும், மற்றவர்களிடம் சொல்ல விரும்பவில்லை. ஸ்ரீதரனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வரும் போதிருந்த உணர்ச்சியின் வேகமும், பார்த்த பிறகு உள்ள மனநிலைமையும் எப்படி இருக்கிறது என்கிற தாரதம்யத்தையும் ஸ்ரீதரனின் அப்பழுக்கற்ற சிறந்த