வை.மு.கோ. 103-வது நாவல்
196
த்யாகமே வடிவான மனோ உறுதியையும் கண்டு, அதைப் பற்றியே எல்லோரும் பேசிப் பேசி, ப்ரயாணத்தை முடித்து வீடு வந்து சேர்ந்தார்கள்.
ஒவ்வொருவருடைய உள்ளத்தில், ஒவ்வொரு விதமான உணர்ச்சியும், எண்ணங்களும் உண்டாகிய நிலைமையில் தம் தம் இருப்பிடம் சென்றார்கள். ஆனால் கமலவேணியம்மாள் மட்டும், உஷாவையும், அவளன்னையையும், தாமோதரனையும் அழைத்துச் சென்று, அங்கு பெரியதாக மாட்டப்பட்டுள்ள தன் கணவனின் புகைப்படத்தின் திரைச் சீலையை விலக்கி, அதைக் காட்டி, “கண்மணீ! உஷா! உஷா! ஒரு அதிசயத்தை இன்று உன் அண்ணன் அங்கு தெரிவித்தான். அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன். இதோ இந்த உன் பிதா எங்கே மறைந்து விட்டாரோ! உயிருடன் இருக்கிறாரோ! இல்லையோ! என்று இரவு, பகல் ஏங்கித் தவித்தவாறு, என்னுடைய ஸௌமாங்கல்யத்தின் வளர்ச்சிக்காக, நான் பகவானை இடைவிடாது வேண்டிக் கொண்டிருந்தேன். அத்தகைய உங்கள் பிதா உயிருடன் இருக்கிறாராம். கொலைக் கைதியாய், அண்ணனிருக்கும் சிறையிலேயே இருக்கிறாராம். ஏதோ விபத்து அவருக்கு உண்டாகியதாம். அதற்கு அண்ணனே, அவருக்கு சிகிச்சை செய்து, தன் ரத்தத்தையும் கொடுத்து உதவினானாம். அவருக்கு அண்ணனைத் தெரியாதாம். அண்ணனுக்கு அப்பாவை நன்றாகத் தெரிந்து விட்டதாம். இந்த ரகஸியங்களைச் சொல்வதற்காகவே, நமக்கு இண்டர்வ்யூ கொடுத்தானாம். இது பற்றி விஷயம் ஏதாவது தெரிந்தால், அதையொரு சிறு கதையைப் போல் எழுதியனுப்புகிறானாம். இந்த ரகஸியம் யாருக்கும் தெரியக் கூடாதாம்…” என்று ஒரே உணர்ச்சி வேகத்தில் மூச்சுக் கூட விடாமல் சொல்வதையும் பட-