பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201

சாந்தியின் சிகரம்

என் மாமனைக் கெஞ்சிக் காலைப்பிடித்துக் கொண்டு, வெளியே போய் விடும் படியாய்த் துரத்தினேன்; என் மாமனுக்கு வந்த கோபத்தில், பதிலுக்கு இவரையே நசுக்கியிருப்பார். என்னுடைய முகத்திற்காக விட்டு விட்டுச் சென்றவர், மறுபடி என்னைப்பார்க்கவே இல்லை. அவருடைய உறவே விட்டு விட்டது. இவருடைய விஷயம் விபரீதமாகி, என்னைப் பிரிந்து ஓடி விட்ட பிறகுதான், மாமா என் வீட்டிற்கு வந்து என்னையே திட்டினார். பிறகு, என்ன செய்ய முடியும். இத்தகைய கதி வரும் என்று நான் நினைத்தேனா; குழந்தையுடன் நான் திண்டாடும் சமயம், என்னுடைய மக்கள், மனிதர்கள் அத்தனை பேரும் திட்டுவதோடு, பரிகஸித்து இளப்பம் செய்தார்கள். அத்தனை பேர்களையும், நான் வெறுத்து, வைராக்யமாய் வாழ்க்கையை நடத்தவே துணிந்து, தனித்து வந்து விட்டேன். ஸங்கீதக் கலையும், நடிப்புக் கலையும் எனக்குத் துணை புரிந்தது. உஷாவை ஒரு புதுமைப் பெண்ணாக்கி விட, என் தாயுள்ளம் துடித்தது; இப்போதும் புதுமைப் பெண்ணாகத்தான்—கண்ணகி, மணிமேகலை, ஔவை முதலிய உத்தமிகளைப் போல் வாழ திட்டமிட்டு விட்டாள்… போனது போகட்டும்… என்று நாம் பேசாமலிருக்க வேண்டுமேயன்றி, இந்த பழைய குப்பையைக் கிளறினால், அண்ணனுடைய புகழுக்கு ஹானிதான் உண்டாகும்; இன்னாருடைய மகன் என்பது தெரியமல், பூடகமாய்ப் பிழைக்கும் நாம் எதற்காக விதிப் பழத்தை, விலை கொடுத்து வாங்கி, சங்கடப்பட வேணும்! பகவான் வைத்த உறவு முறையின் கடமை படிக்கு, முக்யமான விபத்துக் காலத்தில் மகனே உதவி செய்து விட்டது பெரும் பெருமையாகி விட்டது. உண்மையிலேயே, அவர் கொலை செய்திருந்தால், நாம் வீண் ப்ரயத்தனப்பட்டு, நம் மதிப்பைக் குலைத்துக்

சா—18