பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209

சாந்தியின் சிகரம்

கிழவனுக்கு நோயின் பாதை கூட தெரியாது மறந்து விட்டது போல் ஒரு பூரிப்பு உண்டாகியது… “ஆஹாஹாஹா… என்ன அருமையான வார்த்தைகள்… உமை—உண்மை…பக்தி—பத்தி… டாக்டர்! நீங்கள் சாதாரணமான தேக நோயைத் தீர்க்கும் டாக்டரல்ல. ஆத்மாவுக்கே வைத்யம் செய்யும் வைதீச்வரன் என்று சொன்னால், மிகையாகாது… ஆகா… உமை… உண்மை, பக்தி… பத்தி. இதை இனியாவது, இந்தப் பாபி மறக்காதிருப்பானா… டாக்டர்! இத்தகைய மேதாவியான நீங்கள், இந்த சனியன் பிடித்த ஜெயிலுக்கு ஏன் டாக்டராக வர வேணும். படுபாவிகள், கொலையாளி, ப்ரம்மஹத்திக் காரர்கள். திருடர்கள், மோசக்காரர்கள்… அப்பப்ப. இனி சொல்லவே முடியாது உலகத்தில் எத்தனை விதமான துன்மார்க்கர்கள் உண்டோ, அத்தனையும் சேர்த்து வைத்து ஒரே இடத்தில் பார்க்கச் செய்யும் நரகமல்லவா இது. இந்த நாற்றக் குப்பைக்கு என் டாக்டர் நீங்கள் வர வேணும்…”

இந்த வார்த்தையைக் கேட்க, ஸ்ரீதரனுடைய இதயத்தில் ஏதோ சங்கடம் செய்து வருத்துகிறது. ‘நானும் ஒரு ஒரு கைதிதான் என்பதை உணர்ந்து விட்டால், இப்போது வைத்துள்ள மதிப்பு திடீரென்று இறங்கி விடுமல்லவா! உம் இவர் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான். நரகம் என்றால் வேறு வேண்டாம். இதிலும் தப்பித் தவறி நிரபராதிகளும், என்னைப் போல் அகப்பட்டுக் கொண்டிருக்கலாமல்லவா!’ என்று எண்ணியபடியே நோயாளியை உற்று கவனித்தான்.

இயற்கையிலேயே, அவனும் புத்திசாலியாகவே இருந்திருக்க வேணும் என்றும், செயற்கையின் மோகத்தில், இத்தகைய கதிக்கு வந்து விட்டதாயும் எண்ணினான். எந்த விதமாவது அப்பா! என்று அழைக்கும்