பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217

சாந்தியின் சிகரம்

விடுவான் போலாகி விட்டது. சில வினாடிகளுக்குப் பிறகு சற்று சமாளித்துக் கொண்டு “சார் ! உங்களுக்கு” என்று ஆரம்பித்த உடனே, ஜெயிலர் அவனை அப்படியே பிடித்து நடத்தித் தன்னறைக்குக் கொண்டு போய், நாற்காலியில் உட்கார வைத்து, “டாக்டர்! அதிர்ச்சி வேண்டாம். எனக்கு ஒருவாறு சகலமும் விளங்கி விட்டது. மிகவும் பரிதாபப் படுகிறேன். என்னுடைய உள்ளத்தில், இப்போது எப்படி சங்கடம் செய்கிறது என்பதை என்னாலேயே விவரிக்க முடியவில்லை. இதோ! இக்கடிதத்தைப் பாரும்,” என்று ஒரு கடிதத்தை ஜேபியிலிருந்து எடுத்தார். இதற்குள் ஸ்ரீதரனின் உணர்ச்சி அதிகரித்த வேகத்தில், அப்படியே மூர்ச்சித்து சாய்ந்து விட்டான்: ஜெயிலரின் உள்ளம் இதைக் கண்டு துடிதுடித்தது.

28

வெகு ஆவலுடன் தானே உஷா காரை ஓட்டிக் கொண்டு, அம்புஜத்தின் வீட்டை நோக்கிப் பறந்து செல்வது போல் சென்றாள். இவர்களுடைய வரவையே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அம்புஜம், இவர்களைக் கண்டதும், “வாருங்கள் வாருங்கள்! நானே நேரில் வரலாம் என்று நினைத்தேன். அதற்கு சில இடையூறுகள் இருந்ததால், உங்களையே வரச் செய்து விட்டேன். டாக்டரைப் போய் பார்த்து வந்தீர்களாமே, ஏது, அவர் கூட ஒப்புக் கொண்டது. பேசினாரா! உடம்பு ஒன்றுமில்லாதிருக்கிறாரா! என்ன சொன்னார். அப்பீல் வேண்டாம். கேஸ் விஷயமான எதுவுமே வேண்டாம் என்று சொன்னாரா… என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டாள்.

சா—19