வை. மு. கோ. 103-வது நாவல்
232
கிடைத்து விடும் என்று நான் நினைக்கவே இல்லை. நான் இருட்டில் நகர்ந்தவாறு சென்று, கடிதங்களை என் கணவரிடமே கொடுத்து பத்திரப்படுத்தி, அவரை எங்கள் வீட்டிற்குப் போய் விடும்படிக் கூறி விட்டு உடனே நான் இங்கு வந்தேன். அதற்குள் அவள் சாக்கடையைக் கையினால் கிளறிப் பார்க்கையில், அவளுக்குப் போதாக் காலக் கொடுமையினால், ஒரு சிறிய தேள் கையில் கொட்டி விட்டது. திருடனுக்குத் தேள் கொட்டியது போல… என்கிற பழமொழி சரியாகி விட்டதால், அவள் ஒரு துள்ளு துள்ளியவாறு, “ஐயோ ! மேரி… போய் விடலாம், வா…” என்று கூறியபடியே, எப்படியோ நோயைப் பொறுத்துக் கொண்டு, ஒட்டமாக வீதியை அடைந்து, டாக்ஸி வைத்துக் கொண்டு, ஓட்டலை யடைந்தோம்.
தேள் கொட்டிய உபத்திரவம் தாங்காமல், அவள் அலறத் தொடங்கினாள். நான் எனக்குத் தெரிந்த ஏதேதோ மருந்துகளைப் போட்டேன், ஒன்றுக்கும் கேட்கவில்லை. டாக்டரைக் கூப்பிட வேண்டாமென்று கத்தினாள். நான் செய்வதறியாது தவிப்பது போல், பாசாங்கு செய்தவாறு, மறுபடியும் மயக்க மருந்தையே அவளுக்குக் கொடுத்து விட்டு, நான் நேரே என் வீட்டிற்கு ஓட்டம் பிடித்தேன்.
உடனே என் கணவரும், நானும் அந்தக் கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்துப் பூரித்துப் போனாம். அப்பா இது விஷயமாகத்தான் வெளியே போயிருந்தார். அவர் வரவுக்காகவே, இரண்டு நாள் காத்திருந்தோம். நேற்று அவர் வந்த உடனே, அவரிடம் இதைக் காட்டினோம். இன்னொன்று முக்யமானதைச் சொல்ல மறந்து விட்டேனே… சிறைச்சாலையில், உங்கள் பிதா கைதியாயிருப்பதும், ஸ்ரீதரனே வைத்தியம் செய்வதை-