பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233

சாந்தியின் சிகரம்

யும் எப்படியோ அறிந்து அதை ரகஸியமாக இவளுக்கு எழுதியிருந்த ஒரு கடிதமும் இவள் பையில் கண்டெடுத்தேன். அதனால்தான், இவ்விஷயத்தை முதலில் உங்களிடம் சொல்ல ஆரம்பித்தேன். வழக்கு விஷயத்திலேயே பேச்சு மாறி விட்டது. இதற்குள், உங்களுக்கும் வெற்றிகரமான இண்டர்வ்யூ கிடைத்தது. பல வருஷங்களாக மறைந்து கிடந்த ரகஸியமும் வெளியாகி விட்டது. எல்லாம் நன்றாகவே முடிந்தது. இந்த வழக்கு விஷயத்தை நீங்கள் யாரும் வெளியிடவேண்டாம். அப்பாவே, அதற்குத் தகுந்த சமயம் பார்த்து வெளியிடுவார்கள். உங்களுக்கு இந்த சந்தோஷம் தெரிந்தால், நலமாயிற்றே என்று சொன்னேன்.”

என்று சகல விஷயங்களையும் சொல்லி, ஒருவாறு முடித்தாள். இதைக் கேட்ட கமலவேணியம்மாளுக்கு உண்டாகிய பெருமிதமான ஆநந்தத்தில், அப்படியே அம்புஜத்தைத் தூக்கிக் கொண்டு குதிக்கும்படி எங்கிருந்தோ பத்து யானை பலம் வந்து விட்டது. “என் கண்மணியின் மீது படவிருந்த அழுக்கைத் துடைத்து, சத்தியத்தையும், தர்மத்தையும் நிலை நாட்டி, அவனை வாழ வைத்த செல்வீ! என் வயிற்றில் பாலை வார்த்த கற்பகமே ! “கடவுள் ஒருவன் இருப்பது உண்மையாயின், அவனை நம்பிய பக்தர்களை அவன் ரக்ஷிக்கக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதை அவன் உலகறியச் செய்ய வேண்டாமா? நான் நிரபராதி என்பதை அவனே காட்டட்டும், நீங்கள் எத்தகைய ப்ரயத்தனமும் செய்ய வேண்டாம்…” என்று தத்வோபதேசம் செய்து விட்டு, என் செல்வன் சென்ற போது, என் வயிற்றில் எத்தகைய சங்கடம் செய்தது தெரியுமா? நல்ல ப்ராணனாக இருந்தால், அப்படியே போயிருக்க வேண்டும். அனுப-

சா—20