பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

சாந்தியின் சிகரம்

சாப்பிடுங்கள். கூடிய சீக்கிரத்தில் உங்கள் குமாரருடன் கூடவே சாப்பிடலாம்; அடுத்தது, அவருடைய விவாகத்தின் விருந்தும் நடக்கலாம்,” என்று சொல்லும் போது, நாயுடுகாரு வெகு குஷியுடன் உள்ளே வந்தார். “பேஷ்! எல்லோரும் இங்கேயே இருக்கிறார்களா, பலே! அம்புஜம் நீசொல்லிய விஷயங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல், இன்னொரு சந்தோஷ விஷயத்தை நான் சொல்லப் போகிறேன் தெரியுமா…”

என்று முடிப்பதற்குள் அம்புஜம் சிறு குழந்தையைப் போல் குதித்துக் கொண்டு, “விடுதலையாகி விட்டாராப்பா! கடிதத்தை தாக்கல் செய்து விட்டீர்களா!” என்று கேட்டாள்.

நாயுடு :- உம்! இதென்னம்மா ப்ரமாதம்; இது தன்னைப் போலாகும் காரியமல்லவா! நானும் இப்போது பல இடங்களில் சுற்றி, பல உண்மைகளைக் கண்டு பிடித்து விட்டு, ஸ்ரீதரனிருக்கும் சிறைக்கு ஒரு காரியமாய்ப் போயிருந்தேன். நானே கனவிலும் கருதாத விதமாய் ஒரு விஷயம், தானாக வலுவில் கிடைத்தது. அதாவது ஸ்ரீதான் இருக்கும் ஜெயிலரை சில காரணங்களுக்காகப் பார்க்கப் போனேன்; அவர் ஜெயிலில் இல்லை. வீட்டிலிருப்பதாகச் சொன்னார்கள்.

உடனே வீட்டிற்குப் போனேன். அங்கு நான் கண்ட காட்சியை வர்ணித்தே கூற முடியாது: அத்தனை வியப்பும், திகைப்புமாகி விட்டது. அதாவது ஸ்ரீதரனின் பிதாவே, அங்கு கைதியாக இருக்கிறாராம்; அவருக்கு ஸ்ரீதரனே வைத்யம் செய்தாராம். அப்போது, அவர் பிதா தனது சரிதையைப் பூராவும் சொல்லித்