பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ- 103-வது நாவல்

236

தான் ஒரு சிறுவனின் பொருட்டு, த்யாகம் செய்து கொலை வழக்கில் மாட்டிக் கொண்டதாகவும், தனது பாலிய லீலைகளின் பரிபவத்தை உணர்ந்து, தான் உலகத்தில் யார் கண்ணிலும் படாது, சிறை யிலிருப்பதோ, தூக்கு மரம் ஏறுவதோ ஒன்றை வலுவில் வரவழைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்ததாயும், அப்படியே செய்ததாகவும் டாக்டரிடம் சொல்லக் கேட்டதும், ஜெயிலரின் இதயம் வெடித்து விடும் போலாகி விட்டதாம்: அவருக்கு ஆகாயமும், பூமியும் ஒன்றாகச் சுற்றியதால், உடனே ஸ்ரீதரனை அனுப்பி விட்டுத் தான் வீட்டிற்கு ஓடி வந்து படுத்தாராம்.

அப்போதுதான், நானும் போய்ச் சேர்ந்தேன். அந்தக் கைதி எந்த ஒரு சிறுவனுக்காக த்யாகம் செய்தானோ, அந்தச் சிறுவன்தான் இன்று நன்றாகப் படித்து, வ்ருத்தியாகி ஜெயிலர் உத்யோகத்திற்கு வந்து, பல ஊர் ஜெயில்களில் இருந்ததாயும், தனது சிறு பிராயத்து சம்பவத்தை அறவே மறந்திருந்தாராம் என்றாலும், எந்த உத்தமனோ ஒருவனால்தானே நாம் இந்த நிலைமைக்கு வந்தோம். அவன் யாரோ எங்கிருக்கிறானோ; அந்த இருட்டில் ஆளைக் கூட பார்க்கவோ, தெரிந்து கொள்ளவோ முடியாது போய் விட்டது. பாவம் அவன் என்னவானானோ என்று எப்போ தாவது எண்ணி வருந்துவாராம்.

இத்தனை வருஷ காலமாய், இதே சிறையில் இதே மனிதனைப் பார்த்துப் பழகி, பல தரம் கண்டித்து, தண்டனையும் கொடுத்துப் பின்னும், பாவியாகி விட்டோமே—இவன்தான் அன்று என் தாயாரின் உயிரைக் காத்து, என் வாழ்வை உயர்த்திய உத்தமன் என்று தெரிந்ததும், எனக்கு இதயமே நின்று விடும்