பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ.103-வது நாவல்

238

கையில் பார்த்திருக்கிறேன். அவரிடம் நான் தனிமையில் பேசுகையில், ஸ்ரீதரன், ஜெயிலர் இருவரும் இருந்தார்கள்.

ஜெயிலரின் சோகம் கட்டு மீறி விட்டது. அவர் துக்கத்தைத் தாளமாட்டாது, கைதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கதறியவாறு, ‘ஐயா எந்த ஒரு சிறுவனுக்காக நீங்கள் த்யாகம் செய்தீர்களோ, அந்தப் பாவி நான் தான்’ என்று சகல வரலாற்றையும் சொல்லி, மன்னிப்பும் கோரியதுடன், ‘இதோ இவர் யாருமில்லை. துப்பறியும் நிபுணர் ராஜாராம் நாயுடுகாருதான்! இவர் இதோ இருக்கிறாரே டாக்டர், இவர் யார் தெரியுமா? சாக்ஷாத் உங்கள் மகன் டாக்டர் ஸ்ரீதரன் இவர்தான்’ என்று சொல்லி வாய் மூடு முன், அந்த மனிதனின் ஆனந்த உணர்ச்சி இருந்த நிலைமையை வர்ணிக்கவே முடியவில்லை. அப்படியே… ‘ஹா… என் கண்மணி ஸ்ரீதரனா… என்னருமை செல்வன் ஸ்ரீதரனா…’ என்று கட்டித் தழுவினார். அடுத்த நிமிஷமே, ஜெயிலரை நோக்கி, ‘அப்பனே! உன் தாயார் சவுக்யமாய்ப் பிழைத்தாளா? ஒன்றுக்கும் உதவாக்கரைக் கட்டையாகிய நான் எப்படியானால் என்ன? அந்த சமயம் கடவுள் உன்னைக் காப்பாற்றி, இத்தனை உயர்ந்த பதவியில் இருக்கும் படிக்குச் செய்தாரே! நான் ஆதியில் செய்துள்ள மகத்தான பாவத்திற்கு, இந்த ஒரு சிறிய உதவியாவது என்னால் செய்ய முடிந்ததே என்று நான் பூரிக்கின்றேன். என் மகனைச் சந்தித்த சந்தோஷத்தை விட, உன்னைக் கண்ட சந்தோஷமே எனக்குப் பொங்கித் ததும்புகிறது. போனது போகட்டும்; இனி மேல், இந்தப் பாவியின் ஆதி குப்பையைக் கிளறாதே! நீ எந்த ரகஸியத்தையும் வெளியிட்டு எதுவும் செய்ய வேண்டாம். என்று நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என் செல்வனை