வை. மு. கோ. 103-வது நாவல்
242
ஸியமாகக் கூறி என்னை எச்சரித்தார். இது சுத்தப் பொய்யாக இருக்கும் என்று நான் நம்பவில்லை… இருந்தாலும், அப்படி உண்மையாயிருக்குமானால், இது விஷயத்தை உங்களிடமே கூறி, உங்களை உடனே இங்கிருந்து வெளியேற்றிக் காப்பாற்றி விடலாம் என்பதற்காக ஓடி வந்தேன். தாயே! ஏதாவது உண்மை இருக்குமானால், உடனே ஓடி விடுங்கள். இல்லையேல், தாராளமாக வந்து வாதாடுங்கள்! பயப்படவே வேண்டாம். நான் போய் விடுகிறேன்…”
என்று மேரி சொல்லும் போதே, வெள்ளை மாதிற்கு உயிரே போய் விடும் போலாகி விட்டது. “ஹா… இது உண்மையா மேரி? நிஜமாகவா என்னைக் கைது செய்யப் போகிறார்கள்… ஐயயோ…” என்று தவித்த க்ஷணமே “நிஜமாகவே கைது செய்ய சகல ஏற்பாடுகளுடன், இதோ சர்க்கார் வாரண்டுடன் வந்திருக்கிறோம்'” என்று கூறியவாறு, அதே சமயம் போலீஸ்காரர்கள் அரெஸ்டு வாரண்டுடன் வந்து கைதியாக்கினார்கள்.
வெள்ளை மாதின் இதயத் துடிப்பு பின்னும், அதிகரித்து ‘ஹா…’ என்று கூச்சலிட்டாள். இன்ஸ்பெக்டர் சாவதானமான த்வனியில், “அம்மா கப்பலேறி வந்து, கை விலங்கு மாட்டிக் கொண்ட பெருமையுடன் தப்ப வேண்டுமானால், கொலை நடந்த விஷயமான சகல உண்மைகளையும் சொல்லி விட்டால், உனக்குத் தூக்கு தண்டனை வராது. சாதாரண தண்டனையிலும் சற்று குறையும். நீ இனி மேல், எதையும் மறைக்கவோ, தப்பவோ முடியாது: சட்டைப் பைக்குள் பதுக்கியுள்ள விஷ மருந்தை… கடிதங்களை எடுத்து வெளியே வை… உம்… அவைகளை மரியாதையாய் நீங்களே எடுத்து வையுங்கள்” என்றார்.