பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ.103-வது நாவல்

244

டன் கொண்டு வந்தோம். துரைக்கண்ணன் மனமுடைந்து, அவர் மகளை அவரேதான் அடித்துத் தள்ளினார். அந்த வேகத்தில், அவள் இறந்தாள். மகளின் பரிபவத்தினால் தவிக்கும் சமயம், மருமகனாய் வந்த படுபாவிதான் அவரை அடித்துக் கொன்றான். வில்லை என்னிடம் மறைக்கும் படிக்குக் கொடுத்தான். அச்சமயம், அங்கு ஏகப்பட்ட ஆட்கள் வந்து விட்டதால், ஒரு சாக்கடையில் புதைத்தேன்; எந்த சாக்கடை என்கிற இடம், குறி தெரியாது தேடித் தேடி அலைந்து ஏமாந்தேன். துரைக்கண்ணனைக் கொன்றவன் என் அண்ணனாக வேடமணிந்தவன்தான். டாக்டர் நிரபராதி என்பதை, நான் சத்யமாய்ச் சொல்கிறேன். வில்லு கிடைத்தால், அதை தாக்கல் செய்து, டாக்டரை மீட்டு விட்டு, நான் சாகவே எண்ணினேன்: என் விதி வேறு மாதிரியாகி விட்டது. என்னை கர்த்தன் மன்னிப்பானாக…” என்று ஆவேசம் வந்தவளைப் போல் கூறினாள். சகலமும் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. “மேரி… உன்னையும் நான் ஏமாற்றி…” என்பதற்குள் நாயுடுகாரு, “அம்மா! மேரியை உன்னால் ஏமாற்ற முடியாது. அவள் வெறும் மேரியல்ல, துப்பறியும் ராஜாராம் நாயுடுவின் அருமை மகள் அம்புஜந்தான். தெரிந்ததா? உன்னிடம் துப்பறிவதற்காகவே, வேலைக்காரியாயிருந்து, சகல உளவையும் அவளே கண்டு பிடித்தாள்”—என்று நாயுடு சொல்வதைக் கேட்ட வெள்ளை மாதும், கூட இருந்த அதிகாரிகளும் வியப்புற்றார்கள். அடுத்த க்ஷணமே மேரி, அம்புஜமாய்க் காட்சியளித்ததைக் கண்டு பூரித்தார்கள்.

வெள்ளை மாது மறுபடியும் வியப்புடன் அம்புஜத்தை நோக்கி, “தாயே! புனிதவதீ! இத்தகைய பரோபகார மார்க்கத்தில், என் காலத்தைக் கடத்தியிருந்தால், எத்தனை பயனடைந்திருப்பேன். துப்பறியும் கதை