பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை மு. கோ. 103-வது நாவல்

248

என்னுள்ளம் பூரிக்கிறது. குழந்தாய், என்னுடைய வேண்டுகோள் இரண்டே இரண்டுதான் இருக்கிறது; அவைகளை நீ பூர்த்தி செய்து கொடுக்க வேணும். அப்படியே செய்வதாக, வாக்குக் கொடுக்கிறாயா?” என்று குரல் தழதழக்கக் கேட்டார்.

டாக்:- அப்பா! இதென்ன கேள்வி, எந்த ஒரு கட்டளையை நீங்கள் இட்டுச் செய்யும்படிச் சொன்னாலும் கார்த்திருக்கிறேன்; ஆனால், ஒன்று… என் கல்யாண விஷயம் தவிர, வேறு எதுவாயினும் சரி. என்னுயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றுவேன்; இது சத்யம்… சொல்லுங்களப்பா.

பித:-செல்வா! ஒன்று, நான் இனி மானமிழந்து, சீர் குலைந்து, ஊரார் காறி துப்ப, கண்டார் நகையாடும் படியாய், உற்றார், உறவினர், சினேகிதர்கள், முன்பு நான் வாழச் சற்றும் ப்ரியப்படவில்லை; என் காலம் பூராவும், இங்கேயே துலைத்துத் தலை முழுகி விட எண்ணினேன்; விதி வேறாக அமைத்து, என்னை வெளியுலகிற்கு தானே தள்ளி இழுத்துச் செல்கிறது. இதை நான் தடுக்க விரும்பி, நேற்றிரவு பூராவும், ஜெயிலர் என்னிடம் தனிமையில் பேசுகையில், போராடி கெஞ்சினேன். இதற்கு நான் இசையவில்லை என்றால், அவர் பழைய குப்பைகளைக் கிளறித் தாமே அகப்பட்டுக் கொண்டு, சட்ட பூர்வமாய்த் தான் இந்த ஸ்தானத்தை ஏற்று, என்னை ராஜபாட்டையில் வெளியேற்றி விடத் துணிந்து விட்டதாயும், இனி, இதை மாற்ற முடியாதென்றும் சத்தியமும், குலதெய்வத்தின் மீ து ஆணையும் வைத்துக் கூறி விட்டதால், நான் அவருடைய க்ஷேமத்தைக் கோரி, ஆதியில் இந்த இடத்திற்கு வந்தது போல், இன்றும் அவருடைய நன்மையைக் கோரி, நான் வெளியே செல்ல ஒப்புக் கொண்டேன்.