பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249

சாந்தியின் சிகரம்

கண்மணீ! இந்தக் கட்டையை இதோடு நீ மறந்து விடு. நான் எங்காவது கண்காணாத இடம் சென்று, சரியானபடி ஸ்வாமிகளை—ஆசாரியனை— அடைந்து, அவருடன் இருந்து பேறு பெற்றுப் போகிறேன். இதை நீ வெளியிடாமல் இதற்கு உத்திரவு கொடுக்க வேண்டும்.”

என்று முடிப்பதற்குள், ஸ்ரீதரன் அவரைத் தடவிக் கொண்டு, “அப்பா! உங்கள் வயிற்றில் பிறந்ததன் மகிமையாலும், மகா உத்தமியான என் தாயாரின் ரத்தத்தில் ஊறியதாலும், நானும் சிறிது மூளையுடன்தான் வேலை செய்கிறேன். உங்களுக்கு முன்பு, நான் என்ன தீர்மானம் செய்திருக்கிறேன் தெரியுமாப்பா! உங்களுக்கு இனி மேல், உலகத்தில் நன்மதிப்பும், பெருங்கீர்த்தியும் உண்டாகும்படியான புதிய உலகத்தை ச்ருஷ்டித்து, அதில் உங்களை அமர்த்தி, உங்கள் இதயத்தில் சாந்தி நிலவி, நாளாவட்டத்தில் சாந்தியின் சிகரத்தில் நீங்களே அமர்ந்து, பூரித்து, அந்த பூரிப்பின் பலனால், பல ஜனங்கள் பயனடைந்து, வாழ்ந்து போகும் படியான ஒரு நூதன திட்டத்தை, நான் உங்களைப் பார்த்த அன்றே, போட்டு விட்டேன் தெரியுமா! நமது ரகஸியம் இங்கு சம்மந்தப்பட்ட ஒரு சிலரைத் தவிர, இந்திரா, சந்திராவுக்குக் கூட தெரியக் கூடாது என்றல்லவா நான் தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் வெளியே வந்ததும், எனக்கு ஒரு பரமாசாரிய குரு ஒருவரிருக்கிறார்: அவரிடம் உங்களை ரகஸியமாகவே கொண்டு விட்டு, உங்களுடைய வாழ்க்கையைப் புனிதமாக்கவும் சாந்தியின் சிகரம் என்ற பெயருடன் ஒரு மடமே ஸ்தாபித்து, அதில் சதா பகவன்னாம பஜனையும், சத்காலக்ஷேபமும், தர்ம வைத்ய சாலையும் நிறுவி, அதன் மூலம் நாம் எல்லோரும் புனிதமடைய ஏற்பாடு

சா—21