பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

252

ஆசையே இல்லாத என்னை, இந்த ப்ராமணமென்கிற பிணைப்பில் மாட்டிக் கொண்டு தவிக்க வைத்துக் கடவுள் வேடிக்கைப் பார்க்காமல் காப்பாற்றினாரே, அதுவே போதும். ஸார்! நான் இன்னொரு ப்ரமாணம் உங்ககளுக்குச் செய்கிறேன்: தற்கால வைத்திய முறையில், பல பல புதிய புதிய அம்சங்கள் கையாளப்படுகின்றன. அம்முறையில், உங்கள் மகளுடைய கண்ணுக்கும், என்னால் கூடிய வரையில், வைத்யம் செய்து, கண்ணைக் குணப்படுத்தப் பார்க்கிறேன். கண் குணமாகி விட்டால், நல்ல வரனாக நானே தேடி, கல்யாணத்தையும் செய்து வைக்கிறேன். அப்படி இல்லை என்றால், நானே மணந்து கொண்டு, அவளைக் காப்பாற்றுகிறேன்; சரிதானா…” என்று கூறும் போது, அவன் முகத்தில் ஒரு புதிய சக்தியின் சோபையும், கண்களில் ஒரு தனித்த ப்ரகாசமும் உண்டாகி ஜ்வலித்தது.

அதற்கு மேல் வார்த்தைகள் அதிகம் நடக்கவில்லை; நேரமும் ஆகி விட்டதால், ஜெயிலர் தன் மீது பிறருக்குச் சந்தேகம் இல்லாமலிருப்பதற்காக, கிளம்ப யத்தனித்தார். அந்த ஜாடையைத் தெரிந்து கொண்டு, ஸ்ரீதரனும் கிளம்பினான். இத்தனை நாளாக வறண்ட கட்டை போலிருந்த இதயத்தில், இன்றுதான் புத்திர வாத்ஸல்யத்தின் அலைகள், ப்ரமாதமாய் எழுந்து கொந்தளித்ததை, டாக்டரின் பிதா உணர்ந்து, உள்ளூரக் குமுறிப் போய்க் கண் கலங்கி விட்டார்.

“டாக்டர்! உங்களை வரவேற்கும் வைபவத்திற்காக, நேற்றிரவு முதல் சிறை வாசலில், நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்… அவர்கள் கையிலுள்ள புஷ்ப மாலைகள் உமது கழுத்தையலங்கரிக்க ஆவலுடன் துடிதுடிக்கின்றன. உமது தாயார் உம்மை