பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255

சாந்தியின் சிகரம்

முகத்தில் பொங்கி வழியும் சாந்தியும், பார்க்கப் பார்க்க நாஸ்திகன் கூட, உடனே ஆஸ்திகனாய் மாறி விடுவான். இத்தனையும் செய்து வைத்திருக்கும் பெருமை டாக்டர் ஸ்ரீதரன் ஒருவனுக்கே உரிமை என்றால், மிகையாகாது. பாவம்! அத்தகைய சுத்தாத்மாவையும், ஏழரை நாட்டுச் சனியன் ஆட்டியே விட்டதே! ஸார்! நீங்கள் போய்ப் பார்த்தீர்களா!” என்று ஒரு உத்யோகஸ்தர் மற்றொரு வயதானவரைக் கேட்டார்.

அவரும் வியப்புடன், “இப்போது என்னிலைமை வேடிக்கையாகி விட்டது. நான்தான் முதலில் பார்த்ததாகப் பெருமையடைந்து, உம்மை அங்கு அழைத்துச் செல்வதற்கல்லவா வந்தேன். என்னை விட, நீர் முந்திக் கொண்டு விட்டீரே! என்று இப்போது பொறாமையா யிருக்கிறது. நான் ஏற்கெனவே ஸ்ரீதரனின் பேஷண்டு. என் முட்டாள் தனத்தினால், நான் நான்காம் தாரம் மணந்து, நாசமாய்ப் போன அவமானத்தைப் பிறகே, உணர்ந்தேன். என்னுடைய உத்தம மனைவி… இளம் நங்கை—அவள் மனம் சாந்தியடையும் பொருட்டு, அந்த ஆச்ரமத்தில் சேர்ப்பதற்கு, ஏற்பாடு செய்து விட்டேன். ஸார். இந்த சாந்தியின் சிகராலயத்தைப் பார்த்து நம் பாரத நாடே பூரிக்கின்றது…”

“ஆமாம்! அந்த அஸகாய சூரனான டாக்டர் ஸ்ரீதரன், தான் இருந்த ஜெயிலின் அதிகாரியின் மகளுக்கு, ஆச்சரியமாய் ஒரு சிகிச்சை செய்திருக்கிறாராமே. ஒரு கண்ணில்லாது அப்பெண் தவித்தாளாம். அவளுடைய வயது, அவளுடய பலம் முதலிய சகல விஷயத்திலும் ஒத்திருக்கும் மற்றொரு பெண், நோய் வாய்ப்பட்டு உயிர் நீத்து விட்டாளாம். உடனே, அவளுடைய ஒரு கண்ணை எடுத்து இந்தப் பெண்-