பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257

சாந்தியின் சிகரம்

கமலவேணியம்மாளின் உள்ளத்தில் மட்டும் ஒரு சிறு குறை மாறவே இல்லை. அதுதான் ஸ்ரீதரன் கல்யாண விஷயத்தில், பிடிவாதமான உறுதியாகும். கல்யாணம் செய்துத் தன் கண் குளிரக் காண வேணும் என்று எத்தனையோ மன்றாடினாள். அது மட்டும் நடக்கவே இல்லை.

உலகத்தவர்களுக்கு மட்டும் ராஜரத்தினம் ஒரு சாமியாராகக் காக்ஷியளிக்கவில்லை; உண்மைத் து றவியாகவே ஆகி விட்டார். அவருடைய பழுத்த ஞான வைராக்யம், சுடர் விட்டு ப்ரகாசிக்கின்ற அழகைப் பார்த்துப் பூரித்தது அவருடைய குடும்பம். உலகத்திலேயே ஒப்புயர்வற்ற பேராநந்த வெள்ளத்தையனுபவிக்கும் நிர்மலமான இதயமும், த்ருப்தியும் டாக்டரின் உள்ளத்தில் தேங்கி விட்டது. ஏற்கெனவே இருந்த மகத்தான கண்ணியமும், புகழும் இப்போது பதினாயிர மடங்காகப் பெருகிப் பெரும் சிகரத்தில் சிறகடித்துப் பறக்கத் தலைப்பட்டது.

எனினும், தன்னைப் பெற்ற தாயாரின் மனத்தை நோக வைப்பதற்கொப்ப, கல்யாண விஷயத்தில் பிடிவாதம் செய்வதைக் கண்டு, தனக்குத்தானே சில சமயம் வருந்தாமலும் இல்லை… “கண்மணீ ஸ்ரீதர்! உன்னை தம்பதிகளாகக் கண்டு களித்தால், என் மனக் குறை தீரும். இத்தனை ஸாதித்த நீ, அந்த ஒரு ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடாதா!” என்று கமலவேணி மீண்டும் கெஞ்சலானாள்.

ஸ்ரீதர்.-அம்மா! உங்களுக்கு ஆயிரங் கோடி நமஸ்காரம் செய்து வேண்டுகிறேன்! “ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்கிற வள்ளுவரின் தெய்வீக வாக்கின்படி நீ இப்-