பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261

சாந்தியின் சிகரம்

சாந்தியை யளிக்கக் கூடியதாயும், நீ திருவுள்ளம் பற்றி, அருள் பாலிக்க வேண்டும்! என்று தனக்குள் எண்ணியபடியே, “அம்மா! சரி! உன் இஷ்டப்படியே போடு! அதில் எந்த சீட்டு வந்தாலும், பகவானின் கட்டளை என்று நான் தேருகிறேன். நீயும் அப்படியே சந்தோஷப்பட வேண்டும்” என்றான்.

கமலவேணி அதற்கு இசைந்து, தாமோதரனையே அழைத்துச் சீட்டுக்களை எழுதச் செய்து, அதைத் தானே வாங்கி, கடவுள் ஸன்னிதானத்தில் குலுக்கிப் போட்டு, பாரபக்ஷமற்ற த்யாகியான உஷாவைக் கொண்டு, சீட்டை வெகு ஆவலாக எடுக்கச் செய்தாள்.

கமலவேணியே சீட்டை வாங்கிப் பார்த்தாள். “ப்ரம்மசரியமே சாந்தியின் சிகரம்” என்றிருந்ததைப் பார்த்ததும், “செல்வா! நீயே லக்ஷ்யவீரன், நீயே கர்மயோகி, நீயே வெற்றி பெற்றாய்! புகழ் என்கிற மாதை மணந்து, இன்ப வாழ்க்கையுடன் சாந்தியின் சிகரத்தில், தன்னரசு புரிந்து மகிழ்ச்சியடைவாய். இனி நான் உன்னிடம் இது விஷயமாகப் பேசுகிறதில்லை…” என்று கூறி, மகனைக் கட்டியணைத்துத் தடவிக் கொடுத்தாள். தாமோதரனின் கண்களில் ஆநந்த பாஷ்பம் பெருகியது…

தன் தாயாரை ஸ்ரீதரன் அப்படியே தூக்கிக் கொண்டு குதித்தான். “என் முன்னறி தெய்வமாகிய உன் மனம் பூரித்து விட்டால் போதும். இனி இதை விடநித்ய கல்யாண மங்கள வைபவ சுகம் நமக்கென்ன வேண்டும்? அம்மா! சாந்தீ! சாந்தி —எங்கும் சாந்தி!” என்று கோஷித்தான். அதைக் கண்ட கமலவேணியின் உள்ளம் பூரித்தது. உடனே டாக்டர், சாந்தியின் சிகராலயத்திற்கு ஓடிச் சென்று, ஸ்வாமிகளை தரிசித்து, விஷயங்களைச் சொல்லி மிகவும் குதூகலத்துடன் கும்மாளமிட்-