பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

சாந்தியின் சிகரம்

பொறுக்கி எடுத்து நாம் கற்றுக் கொண்டால், எத்தனையோ உபயோகமாயிருக்கும். பெரியோர் இவைகளை அறியாமலா, “போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்  தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை  மாற்றினும் மாற்றுவர் வன்க ணாளர்கள்  கூற்றினும் கொடியவர் புலவ ராவரே” என்று பாடியிருக்கிறார்கள்? பொருள் கொடுப்பதாயின், புகழ்ந்து போற்றுவார்கள். இல்லையேல், சகலமும் இல்லையாகி விடுகிறது! அது மட்டுமல்ல; மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இம்மூன்று ஆசைகளையும் விட்டதாக மேல் பூச்சு பூசிவிட்டுப் பெண்ணாசையை வேண்டுமாயின் ஓரளவு மறந்து, மற்ற இரண்டு ஆசைக்கும் அடிமையாகும் குணமுடைய சாமியார்கள், நீங்கள் சொல்வது போல், விளம்பரத்திற்குதானே ஆசைப்படுவார்கள்! உண்மையில் சொல்கிறேன். சாமியார்களைக் கண்டாலே, எனக்கு அவ்வளவு பிடிப்பதில்லை. நூற்றுக்கு 99 பேர்கள் போலிச் சாமியார்கள்தான். வெளி வேஷத்தைக் கண்டு உலகம் மயங்குகிறது.

துளஸி:-டாக்டர்! சாமியார்கள் விஷயத்தில் என் அபிப்ராயமும், உங்கள் அபிப்ராயமும் அப்படியே இருக்கிறதே! என் தாயாருக்குச் சாமியார்கள் என்றால், சற்று பக்தி உண்டு. ஆனால், எனக்கு பக்தியும் இல்லை. அவர்களிடம் நம்பிக்கையுமில்லை. இதென்ன காரணமோ, எனக்கே புரியவில்லை.

ஸ்ரீதர்:- தாயே ! புரியாத மர்மங்கள். சிலவற்றை அறிந்து, உலகமும் உலக மக்களும் பாவனமடைகிறார்கள். பின்னும் சிலவற்றால், நாசமடைகின்றார்கள். இதைப் பற்றி விளக்கிப் பேசினால், பயித்தியக்காரன் என்றும், ஏதோ உளறுகின்றான் என்றும் ஜனங்கள் பரிகஸிக்கிறார்கள். ஏன்? என்னையே பலர் பரிகஸித்துப் பேசுவதை