வை. மு. கோ. 103-வது நாவல்
44
நான் அறியாமலில்லை. வீண் வம்புக்கும், விதண்டாவாதத்திற்கும், உலகத்தை நாசமாக்கும் ஆசாபாசங்களுக்கும் மக்கள் தயங்குவதில்லை! அத்தனை தூரம் போவானேன்? இப்போது நாம் பார்த்த இடத்தில், எத்தனை வித உணர்ச்சிகளை ஒரு க்ஷணத்தில், ஒரே மனிதரிடம் பார்த்தோம். உங்களை நான் காரில் வரும்படி அழைத்ததும், நீங்கள் வந்து ஏறினதும் கண்ட அதே இடத்தில், அதே மனிதர்கள் பேசியதையும், உணர்ச்சி மாறியதையும் நீங்கள் கவனிக்கவில்லையா?… இதுதான் உலகானுபவத்தைப் போதிக்கும் பாடசாலை என்று சொன்னேன் —என்ற போது, துளஸிபாயின் வீடு வந்து விட்டது.
துளஸிபாய் மரியாதையாய் இறங்கித் தனது வந்தனத்தை மறுபடியும் கூறிப் பின், “டாக்டர்! தயவு செய்து நாளைக்கும் வந்து பார்க்க வேண்டும்” என்றாள். “நீங்கள் சொன்னாலும், சொல்லா விட்டாலும், அந்தப் பேஷண்டைப் பார்க்காமலிருக்க மாட்டேன். அவள் தன் குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சவும், அதை அவள் கணவன் கண்டு பூரிக்கவும் அவைகளைக் கண்டு பகவான் சந்தோஷப்படும் வரையில் அங்கு வருவேன்… குட் நைட்!”… என்று கூறி விட்டுக் காரைத் திருப்பினான். காற்றுப் போல் காரும் பறந்தது!
7
முதலில் கடிதத்தை எப்படியாவது சின்ன மகனிடமிருந்து வாங்கிக் கிழித்துப் போட்டாலன்றி, கமலவேணிக்கு நித்திரையே கொள்ளாது போய்த் தவிக்கிறாள். “யாரோ தாம்பூலம் வைத்து அழைத்தது போல், இந்த விருந்தாளியை யார் வரச் சொல்லியது? எனக்கு தர்ம சங்கடமாகி விட்டதே?" என்று கவலையுடன் படுத்தும் புரளுகிறாள். வந்த மனுஷியோ, இந்தம்மாளுக்கு ஏதோ உடம்பின் பாதைதான் தாங்காமல் தவிக்கிறாளோ என்று எண்ணி, “கமலம்! ஏம்மா இப்படி புரளுகிறாய்? உடம்புக்கு