பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

50

படியே அடக்கி விடுவதுதான் சரியான காரியம்… என்று இவள் தனக்குள் எண்ணமிட்டவாறு, உட்கார்ந்திருக்கிறாள். மகன் நிம்மதியாய்த் தூங்கிய பிறகே, தான் போக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்; ஸ்ரீதரன் எத்தனை சொல்லியும், அவள் போக மறுத்து விட்டதால், அவன் தன் விடுதிக்குச் சென்றான். கடிகாரமும் தன் கடமையில் கண்ணாய் ஓடிக் கொண்டு, மணி மூன்றடித்தது!

8

ஸ்ரீதரனுக்கு மட்டும் தூக்கமே பிடிக்கவில்லை. அன்று பூராவும் அதிக அலைச்சல் இருந்தும், அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றியே, அவனுடைய மனத்தில் பெரும் போர் நடக்கத் தொடங்கியது. “பேயாவது? பிசாசாவது? தம்பி மட்டும் பார்த்ததாகச் சொல்லி இருந்தால், அதை நான் நம்ப மாட்டேன்; வேலைக்காரன் வேம்புவும் பார்த்ததாகச் சொல்கிறானே! கருப்புப் போர்வை போர்த்த கள்ளன் யாராக இருக்க முடியும்? ஒரு பொருளும் களவு போகவில்லை. ஆதலால், உளவறிந்த எந்தக் கள்ளனாவது வந்திருக்க வேண்டுமேயன்றி, இது திடீரென்று தோன்றிய கள்ளனாக இருக்க முடியாது. இது வரையில், இத்தகைய அஸம்பாவிதங்கள் எதுவுமே நடக்கவில்லையே! இப்போது மட்டும் இதென்ன விசித்திரம்?… இதை இப்படியே வெறுமை விடக் கூடாது. நம்பிக்கையாய் வீட்டோடு வெகு பழக்கமாயிருப்பதாக நினைக்கும் வேலைக்காரர்களிலேயே யாருக்காவது அல்ப ஆசை உண்டாகி, இம்மாதிரி செய்து, கிடைத்ததைச் சுருட்டிக் கொள்ள நினைத்திருக்கலாமோ? அதற்குள், தப்பி விழித்துக் கொண்டு விட்டதால், குதித்தோடி மறைந்திருக்கலாமோ? என்று எதேதோ எண்ணங்கள் தோன்றுகிறதேயன்றி, பிசாசு, பேய் என்ற நம்பிக்கை உண்டாகவில்லை.

தம்பி தூங்கினானா? தாயார் படுத்தாளா? என்று பார்க்க மறுபடியும் எழுந்து வந்தான். தம்பி சற்று