வை. மு. கோ.103-வது நாவல்
52
தைத் தானே காணவில்லை என்று நீ தேடிக் கவலைப் பட்டாய்!…” என்று முடிப்பதற்குள், கமலவேணியின் முகமே சுண்டி பயத்தினால் வெளிறிப் போய், …ஐயோ! ஏமாந்து விட்டோமே.. என்ற திகில் இதயத்தைத் தாக்கியது; அந்த வேதனையுடன் தத்தளிக்கையில், ஸ்ரீதரன் அவளைப் பிடித்து அமர்த்தி உட்கார வைத்துப் பின், “அம்மா! பயப்படாதேம்மா! பதறாதே! விஷயத்தை நான் ஒருவாறு யூகித்து உணர்கிறேன். அது சரிதானேம்மா? இக்கடிதத்திற்காக நீ ஏதோ தவறான வழியில் செய்து விட்டதாக எண்ணுகிறேன்… இதோ இந்தக் கருப்புப் போர்வையின் மறைவில் சென்றது நீயா? அன்றி உன் கையாளாம்மா!…”
இம்மாதிரி ஒரு கேள்வியை இவன் கேட்பான் என்று அவள் கனவு கூடக் காணவில்லை. அவள் அப்படியே அசைவற்று நின்று விட்டாள்… “ஐயோ ! ஸ்ரீதர்…”
ஸ்ரீதர:- அம்மா ! நடுங்காதே! நான் யூகித்தது உண்மைதானே!…
கமல்:- ஐயோ தம்பீ!… ஸ்ரீதர்!…
ஸ்ரீதர:- அம்மா ! மறுபடியும் அதிர்ச்சியினால், காலையில் வந்தது போல் வந்து விடப் போகிறது. இப்படி உட்காரு… அம்மா! இம்மாதிரி ஒரு மூளை கெட்ட காரியம் செய்யலாமா? இந்தக் கடிதத்தை நீ என்னவென்று நினைத்து விட்டாய் ! இதைக் கொண்டு அவன் என்ன செய்து விட முடியும் என்று நீ எண்ணி, அவனுடைய உயிருக்கே ஆபத்தான காரியம் செய்தாயம்மா? பத்திரம் எழுதி ரிஜிஸ்தர் செய்தாலன்றி, இதை வைத்துக் கொண்டு அவன் என்ன பண்ணுவான்?
கமல:- ஐயோ ! ஸ்ரீதர்! குடும்பத்தின் மான அவமானமும், கட்டுக் கோப்பையும் பாதுகாப்பது என் கடமையல்லவா? அவனிடம் இக்கடிதம் இருந்தால், அது உனக்கும், நம் குடும்பத்திற்கும் பேராபத்தாக முடியுமல்-