பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

54

டாகி, ஏதாவது ஆபத்தில் முடிந்தாலும் முடியும். ஆகையால், நான் அவனிடம் விஷயத்தைக் கூறி பயத்தை வேரறுக்கிறேன்.

“ஐயையோ! தம்பீ! இதென்ன யோசனை. பெத்த தாயார் மீது ஏற்கெனவே அவனுக்குச் சரியான மதிப்பு கிடையாது. வீணான த்வேஷமும், உன் மீது கோபமும் இருக்கையில், இந்த விஷயத்தை நீ சொன்னால், அது இன்னும் இதை விட கேவலமாகி விடுமப்பா… என்னிலைமையில் ஒன்றுமே தோன்றவில்லையே…” என்று கண் கலங்கினாள்.

ஸ்ரீதர:- அம்மா! பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லும் பழமொழியை ஸ்திரப்படுத்தி விட்டாயே ! இப்பொழுது வருந்தி என்ன உபயோகம். அவனோ பாரபுத்தியற்ற மூர்க்கன். இந்த பிசாசின் விஷயமான ப்ரசாரத்தை ஊர் பூராவும் செய்து விட்டால், அது மட்டும் நம் குடும்பத்து கண்ணியத்தை, நம் வீட்டின் பெருமையை, குலைத்து விடாதா! இந்த வீட்டில் பிசாசு உலாவுகிறது என்றால், வேலைக்காரர் கூட நிலைக்க மாட்டார்களே! வீட்டுக்கே களங்கமல்லவா வந்து விடும். அதோடு தம்பி இனி இவ்வீட்டிலிருக்க மாட்டேன் என்று வெளிக் கிளம்பி விட்டால், அப்போது என்ன செய்வது… அம்மா! இதோ பாரு. இந்த விஷயத்தை எப்படியாவது ஒழுங்கு படுத்தித் தம்பிக்கும் தெரிவித்து, முதலில் அவனுடைய இதயத்திலுள்ள பயத்தைப் போக்கி, இதயத்தைக் கெட்டியாக்க வேண்டும், அதை நீ தடுத்தால்…

கமல:- ஸ்ரீதர் ! என்னுடைய பொறுமையற்றத் தனத்தினால் நேர்ந்த விபரீதத்திற்கு, எப்படித்தான் மாற்று தேடுவதோ தெரியவில்லையே! இந்த விஷயத்தை நீ எப்படி மாற்றி மறைத்துக் கூற முடியும்?

ஸ்ரீதர:- அம்மா ! உன்னைக் காட்டிக் கொடுக்காமல், நான் எப்படியாவது இதைச் சமாளிக்கிறேன்; ஆனால்,