வை. மு. கோ. 103-வது நாவல்
62
தூங்குவதைக் கண்டு, சந்தோஷத்துடன் சென்றேன். (அன்புடன் தம்பியைத் தடவிப் பார்க்கும் போது, சிறிது ஜூரமிருப்பதையறிந்து)… அட அசடே! இந்த அல்ப விஷயத்திற்கா உனக்கு ஜூரம் வந்து விட்டது… நான் அப்போதே சந்தேகித்தேன்; அதே மாதிரிதான் ஆய் விட்டது. இதோ பார் தம்பீ! முக்யமான விஷயத்தைச் சொல்லி, உன் பயத்தை வேரறுத்து, உன்னை மகிழ்விக்கவே வந்தேன். எழுந்து உட்காரு தம்பீ! நேற்றிரவு வந்தது பேயுமல்ல, பிசாசுமல்ல; நம்மைப் போன்ற இரண்டு கால் மனிதன்தான் என்பதை, நான் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்த நிசிக்குப் பிறகு தூங்காமல், கண்டு பிடித்து விட்டுத்தான் மறு காரியம் செய்தேன்.”
தம்பி அலறியவாறு, “ஆ… கண்டு பிடித்து விட்டாயா! பேய், பிசாசு, முனீச்வரன் இல்லையா!… திருடன்தானா!” என்று வெகு ஆத்திரத்துடன் கேட்டான்.
ஸ்ரீதர்:- ஆமாம் தம்பீ! ஆமாம். திருடன் என்றால், வெறும் கொள்ளையடிக்கும் சோதாத் திருடனல்ல. ஐயோ பாவம் என்று நாம் பரிதாபப் படக்கூடிய விதம் அனாதையான, துரதிர்ஷ்டப் பிண்டமான உருவம். பகிரங்கமாய் வருவதற்குப் பயந்து…
தம்பி:- என்ன! என்ன! நீ சொல்வதே எனக்குப் புரியவில்லையே அண்ணா… துரதிருஷ்டப் பிண்டமாவது, அனாதையாவது…
ஸ்ரீத:- சொல்லி முடிப்பதற்குள் அவசரப்படுகிறாயே! அனாதையாயும், நிர்க்கதியாயும் தெருவில் நின்று தவிக்கச் செய்த மகத்தான பாதகம் நம்மையே சார்ந்தது தம்பீ! நம் பிதாவைப் பற்றி, உனக்கு விவரம் எதுவும் அதிகம் தெரியாது. அந்த பாபாத்மாவின் அடாத செய்கைக்குப் பலியாகிப் பாழாகிய ஆத்மாக்கள் எத்தனையோ இருக்கின்றன. அதில் ஒருத்தி, நியாயத்திற்கு பயந்து,