வை. மு. கோ. 103-வது நாவல்
66
“அன்புள்ளள தாமூ! காற்றினும் கடிய வேகத்தில், இச்செய்தியை நான் உங்கள் வேலைக்காரர்கள் மூலம் அறிந்து, மிகவும் பயந்து நடுங்கிக் கவலைப்படுகிறேன். உங்கள் வீட்டில் நேற்றிரவு பிசாசு வந்து, உங்களை மிரட்டியதாம். உங்கள் வீடே அல்லகல்லோலமாகி விட்டதாம். அந்த பயங்கர அதிர்ச்சியினால், உங்களுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறதாம். உங்கள் அண்ணன் கூட வந்து, தடபுடல் உபசாரம் செய்தாராம். இப்போது உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கிறது? எனக்கு அங்கு வந்து பார்க்க வேண்டுமென்று ஆசைதான்; ஆனால் இத்தனை நாட்கள் உங்கள் தாயார், அண்ணன், முதலியவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சத்தினால் வராமலிருந்தேன். இப்போதோ, பிசாசு என்ற பதத்தைக் கேட்டதுமே, உடலே நடுங்குகிறது. ஆகையால், நான் இதை எழுதுகிறேன். நீங்கள் தயவு செய்து, இங்கே வந்து விடுங்கள். அந்த வீட்டுப் பக்கமே கொஞ்ச நாளைக்குப் போக வேண்டாம். இங்கேயே இருக்கலாம். அல்லது எங்காவது வெளியூர்களுக்குப் போய், சுற்றி விட்டு வரலாம். ஆகையால், உடனே வரவும். உங்கள் பரிய உஷாதேவி”
இதைப் படித்ததும் ஒரு முறை சிரித்துக் கொண்டான். என்ன அன்பு. எத்தனை உருக்கமாய் எழுதி, நம்மை அழைத்திருக்கிறாள்! உடனே நாம் நேரில் சென்று, இந்த ரகஸியத்தைச் சொல்லி விட்டு வர வேண்டும். எப்படி மறைக்கப் பார்த்தாலும், நமக்கு முன், வேலைக்காரர்கள் மூலம் புசல் போல் பரவி விட்டதே… என்று தனக்குள் எண்ணியபடி, சடக்கென்று வெளியே சென்று விட்டான். இப்புதிய உத்ஸாகத்தின் வேகத்தில், சகலத்தையும் மறந்து விட்டான் என்றால், மிகையாகாது.
10
வெளியே சென்ற ஸ்ரீதரன் ஆஸ்பத்ரி வேலைகளை முடித்துக் கொண்டு, தனிப்பட்ட நோயாளிகளை வீடுகள்