பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

சாந்தியின் சிகரம்

தோறும் சென்று பார்க்கும் வழக்கப்படி பார்க்கச் சென்றான். துரைக்கண்ணன் என்பவர் வெகு செல்வவந்தர். மிகவும் உத்தமமானவர். அவர் இரண்டு மாத காலமாய், வெகு கடுமையான நோயுடன் படுத்திருந்ததால், அவருக்கு ஸ்ரீதரனே பூர்ண குணத்தை உண்டாக்கினான். டாக்டரை தெய்வமாகவே மதித்து, அவனிடம் அஸாத்யமான ப்ரேமையைச் செலுத்தும் துரைக்கண்ணனுக்கு, சில தினங்களாய், எப்படியாவது தன் மகள் பாமாவை ஸ்ரீதரனுக்கு விவாகம் செய்து வைத்துக் களிக்க வேண்டும் என்பது அவருடைய பேராவல்; அதை ஜாடைமாடையாக, ஸ்ரீதரனிடம் தெரிவித்தும், அவனுடைய அனுகூலமான பதில் கிடைக்கவே இல்லை.

இனி நேரிடையாய், விஷயத்தை உடைத்தே சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தினால், இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரனைப் பார்த்ததும், வெகு உத்ஸாகத்துடன் வரவேற்று, “ஸார்! இன்று மிகவும் சுறுசுறுப்பாயும், புதிய உத்ஸாகத்துடனும் ஆரோக்யமாயிருக்கிறது. இன்று முக்யமாய் உங்களிடம் எனது வேண்டுகோளைத் தெரிவித்துக் காணிக்கையைச் சமர்ப்பிக்கப் போகிறேன்…” என்று முடிப்பதற்குள், ஸ்ரீதரன் மகத்தான் ஸந்தோஷத்துடன்… “பேஷ் ! பேஷ்! சபாஷ்! எப்படியும் நான் பேராசை டாக்டர். பணக்காரர்களிடம் அதிகமான பணம் பறிப்பவன் என்று ஒரு சிலர் சொல்கிறார்களாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அந்த பணத்தை நான், எனக்காக உபயோகப்படுத்தி வாழ்வதில்லை. என்னால் முடிந்த மட்டும், ஏழைகளுக்கு தர்ம வைத்தியசாலை வைத்து நடத்துகிறேன். அது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். உங்கள் மனமகிழ, எத்தனை ஆயிரம் கொடுத்தாலும், கை நீட்டி சந்தோஷமாய் வாங்கிக் கொள்ளக் காத்திருக்கிறேன். கொண்டு வாருங்கள்…” என்று கையை நீட்டினான்.

இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கு எழுதியதை ஸ்ரீதரனிடம் கொடுத்து, ஸ்ரீதரனின் இரண்டு கைகளையும