5
சாந்தியின் சிகரம்
என்று மிகவும் பரிதாபமாய்க் கண்ணீர் பெருகக் கூறும் தாயின் வார்த்தைகள் அந்த முரடன் காதில் கேட்கவே இல்லை. சிள்ளென்று சீறி விழுந்தவாறு, ஒரு முறைப்பு முறைத்து விட்டுச் சென்றான். பெற்ற தாயின் வயிற்றில், அந்தப் பார்வையின் பயங்கரம் சுருக்கென்று அம்பு போல் தைத்து வருத்தியது.
2
அந்தப் பார்வையின் பயங்கரம், பெற்ற தாயின் வயிற்றில் சுருக்கென்று அம்பு போல் தைத்து வருத்தியது. குமுறும் உள்ளத்துடன்… இதென்ன இப்படிப் பார்க்கிறாளே! ஐயோ! இந்தப் பார்வை மிகவும் விபரீதமான பயங்கர நிலையைக் காட்டுகிறது. உடனே டாக்டரையாவது கூப்பிடுங்களேன்; ஐயோ ! டெலிபோன் செய்யுங்கள்…அம்மா ஸரஸா !… ஸரஸா!… ஏன் இப்படிப் பார்க்கிறாய்?... இதோ பார்… என்னைப் பாரம்மா ! கண்ணூ!… என்று அடக்க முடியாது, துக்கம் பொங்கி வழியக் கதறுகிறாள். அதே சமயம் டெலிபோன் மேல் டெலிபோன் பறந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் டாக்டர் ஸ்ரீதரன் வெகு பரபரப்புடன் வந்தான்…
டாக்டரின் வருகை, பெண்ணின் தாயாருக்கு சாக்ஷாத் கடவுளே வருவதாகத் தோன்றியதேயன்றி, வெறும் மனித வைத்தியர் வருவதாகத் தோன்றாது, நம்பிக்கையின் துடிப்புடன்… டாக்டர்! டாக்டர்! இதோ பாருங்கள்! ஸரஸா ஏதோ மாதிரி பார்க்கிறாளே!…… அவளுக்கு எத்தகைய பயமும் இல்லையே? டாக்டர்! அவளுக்கு உயிர்ப் பிச்சை தந்து, என் வயிற்றில் பாலை வார்க்க வேண்டும் டாக்டர்… என்று கத்துகிறாள்.
டாக்டர் ஸ்ரீதரன், வெகு நிதானமாய் நோயாளியைக் கூர்ந்து கவனித்துப் பின், “தாயே பயப்படாதீர்கள்! அதிக ஜுரத்தின் வேகத்தினால் இப்படி இருக்கிறது.