பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

72

படியே, தோட்டத்திற்குள் அவனையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

லதாக்ரகத்தில் உல்லாஸமாய் அமர்ந்து பின், சிற்றுண்டிகளை வரவழைத்து இருவருமாய்ச் சாப்பிடத் துடங்கினார்கள். “மிஸ்டர் தாமோதரன்! நீங்கள் இரவு கூட சாப்பிடவே இல்லையாமே; அதனால் இரட்டைப் பங்காய் சாப்பிட வேணும் தெரியுமா! அதோடு, நீங்கள் இன்னும் சில காலம் உங்கள் வீட்டிற்கே போக வேண்டாம். நாம், எங்களுடைய க்ராமத்திற்குப் போய், 10 தினங்களாவது தங்கி விட்டு வரலாம். இன்றே புறப்படுவோம். என்ன சொல்கிறீர்கள். உங்கள் முத்தண்ணாவைக் கேட்க வேண்டுமோ!

தாமு:- சேச்சே ! என்னுடைய சொந்த சவுகர்யத்திற்காக நான் செய்யும் காரியத்திற்கெல்லாம், என் அண்ணன் குறுக்கிடவே மாட்டான்…

உஷா:- ஆமாம்! உங்களுடைய மனச் சந்தோஷத்திற்காக நீங்கள் கல்யாணம் செய்து கொண்டு, இன்பமாக வாழ்க்கை நடத்துவதற்குப் பெருந்தடை செய்யும் பெரிய மனிதன், இதற்கு மட்டும் குறுக்கே வர மாட்டாரா! இப்படி நம்பி, நம்பிதான் காலங் கடந்து கொண்டே போகிறது; இப்படியே என்றைக்கும் இருந்தால், என் தாயார் இதைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறாள்.

தாமோ:- இனி மேல், அதைப் பற்றி கவலையே படாதே உஷா! நான் வீணாக அண்ணன் மீதும், அம்மா மீதும் கோபித்துக் கொண்டிருந்தேன். ‘நீ இஷ்டப்பட்ட பெண்ணை, நீ மணக்க எத்தகைய ஆக்ஷேபணையும் இல்லை’ என்று அண்ணா இன்று காலையில் கூட கூறி விட்டார்; இனி கவலையே வேண்டாம். வெகு விரைவில் இதைப் பற்றி முடித்து விடலாம். ஆனால் ஒன்று, நீங்கள் இந்த ஊருக்கே புதிதானவர்களாதலால், எங்கள் சகோதரிகள், என் தாயார்