பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

சாந்தியின் சிகரம்

முதலியவர்கள் உன் தாயாருடன் கலந்து பேசி, பொது ஜனங்களுக்கு சமாதானமாய் வழக்கப்படி, பார்ப்பது, பேசுவது, என்கிற நாடகம் நடத்தாமல் என் தாயார் இசைய மாட்டார்கள். தாயாரை, மீறி அண்ணாவும் செய்ய மாட்டார். நான் இன்றே, என் சகோதரிகளுக்குக் கடிதம் எழுதி விடுகிறேன்; அடுத்த வாரத்திற்குள், இந்த காரியத்தை முடித்துக் கொண்டே, நாம் ஹனிமூனுக்காக மேல் நாடெல்லாம் ப்ளேனிலேயே சுற்றி வரலாம் என்று நான் நினைக்கிறேன். எனக்கு இந்த பேய், பிசாசுக்கு பயமே இல்லை. திருடனோ என்றுதான் நான் பயந்தேனேயன்றி, மற்றப்படி ஒன்றுமில்லை. நீ சற்றும் கவலைப்படாதே. வெகு சீக்கிரத்தில் காரியம் நடக்க, நான் ஏற்பாடு செய்கிறேன்…” என்று கூறுவதைக் கேட்ட உஷா ப்ரமாத பூரிப்பையடைந்து குதிக்க வாரம்பித்தாள். பின்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர், தாமோதரன் வீட்டிற்கு வந்தான்.

தான் போகும் அவசரத்தில், பெட்டியைத் திறந்தே போட்டு விட்டுச் சென்றது, பின்னர் வந்து பார்த்த போதுதான் நினைவுக்கு வந்தது. அண்ணன் எழுதிய கடிதமும், தனது ப்ரத்யேகமான ப்ரேமைக் கடிதங்களும் காணாததால், முதலில் திடுக்கிட்டு, முற்றிலும் தேடிப் பார்த்தான்; தன் பெட்டியில், மற்றவைகள் அப்படியே இருப்பது கண்டு, இதை வேண்டுமென்று அண்ணனே வந்து எடுத்துக் கொண்டு போய் விட்டதாக, மறுபடியும் அண்ணன் மீதே அடங்காத கோபம் உண்டாகியது. எனினும், இதே கடிதத்தைத் தான் திருட்டுத்தனமாய் அபகரித்ததால், இதை எப்படி பகிரங்கமாய் அண்ணனிடம் கேட்பது என்கிற யோசனையும் உண்டாகியது. தன் தாயாரிடம் கேட்கலாமென்றால், அவளுக்கும் இது விஷயத்தில், எப்படி இக்கடிதம் தன் கையில் கிடைத்ததாகச் சொல்வது என்ற குழப்பம் வந்து விட்டது. அதோடு முதல் நாள் நடந்த சம்பவத்தின் செய்தியை அறிந்த இவனுடைய சினேகிதர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் விசாரிப்பதற்காக வந்து கொண்டிருந்ததால், இவனுக்கு எதுவும் செய்ய முடியாது