77
சாந்தியின் சிகரம்
தகுந்த பெண் பார்க்கச் சொல்லட்டுமா! அன்றி நீயே ஏதாவது பார்த்திருக்கிறாயா! முதலில் கல்யாணம்; பிறகு பாக உரிமை, சரிதானா? முதலில் விஷயத்தைச் சொல்லு. நான் அதற்குள் இதை முடித்து விடுகிறேன். அம்மா! வீணாக, நீ அவனிடம் அதிகம் மனஸ்தாபப்பட்டுப் பேசாதே,” என்று வெகு நிதானமாயும், உரிமையுடனும் கூறினான்.
இதைக் கேட்ட தாமோதரனுக்கு முதலில் ஒன்றுமே தோன்றாது, சற்று அதிர்ச்சியுடன் நின்று விட்டான். பிறகு, தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு, “அண்ணா! நீ சொல்கிறபடி எல்லாம், நான் நம்பிக்கையுடன் கேட்கிறேன். ஆனால், சொன்னதை சொன்னபடி நடத்திக் கொடுக்கத் தவறினால், எத்தகைய விரோதம் உண்டாகும் என்று சொல்ல முடியாது” என்பதற்குள், “தம்பீ ! ஏன் உனக்கித்தனை பயம். நான் கட்டாயம் கொடுத்த வாக்கின்படி செய்து தீருவேன். முதலில் கல்யாண விஷயத்தைப் பற்றிச் சொல்லு. எனக்கு நேரமாகிறது” என்றான்…
தாமோ:-அண்ணா! நீ அதிகப் படிப்பாளி. உன் படிப்பினால், உழைப்பினால் அபாரமான வருவாயைப் பெறக் கூடியவன். நானோ அதிகப் படிப்பில்லாதவன். அதனால், சொல்ப உத்யோகத்தைத்தான் பெற முடிந்தவன்; ஆகையால், நீ சொல்லியபடி சொத்துக்களின் விஷயத்தில் உறுதியாக நீ நடக்க வேண்டும் என்பதை இப்போதே, மறு முறையும் சொல்லி விட்டேன். என் கல்யாண விஷயத்தில், நானே என் மனத்திற்கு ஏற்ற பெண்ணைத் தீர்மானித்திருக்கிறேன்; அதையே, நீயும், அம்மாவும் பார்த்து முடித்து விடுங்கள்; திருபுரஸுந்தரிபுரம் பூமா விலாஸ் பங்களாவிலிருக்கிறாள்; மிக்க செல்வவந்தர் வீட்டுப் பெண்; நன்றாகப் படித்தவள்; மிகவும் அழகுடையவள்.
ஸ்ரீதா:- தம்பீ ! இவ்வளவு போதும். அம்மா! நான் இப்போதே சகோதரிகளுக்கு தந்தியடித்து, வரவழைத்து விடுகிறேன்; உடனே எல்லோருமாக நேரில் சென்று