பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

78

பார்த்து முடித்து விடுவோம்; மனப் பொருத்தத்திற்கு மிஞ்சியதுதான் ஜாதகமும், மற்றதும். ஆகையால், ஜாதகத்தைப் பற்றிய பேச்சே எடுக்க வேண்டாம். அவன் இஷ்டப்பட்டதே போதும். குறுக்கே பேசாதேம்மா… தம்பீ இனி, நீ கவலையற்று நிம்மதியாக இரு. அம்மாவிடம் நீ மனங் கோணும்படி நடக்காதே”—என்று எச்சரித்து விட்டுத் தனக்கு ஜோலியிருப்பதால், சென்று விட்டான்.

இதற்கு மேல், தாமோதரனால் எதுவும் பேச இடமில்லாது போய் விட்டதால், தன் விடுதிக்குச் சென்று, உடனே இந்த சந்தோஷமான விஷயங்களை டெலிபோனில் உஷா தேவியிடம் சொல்லிப் பூரித்தான். அதுவே அவனுக்குப் பேரானந்தமாயிருந்தது

12

லகத்திலேயே தன்னை விட அழகும், தன்னை விட செல்வச் செருக்கும் உடையவர்கள் கிடையாது என்கிற எண்ணம் பரிபூர்ணமாயிருக்கும் ப்ரக்ருதியாகையால், ஸ்ரீமதி உஷா தேவி எந்த அம்சத்திலும், தனித்த முறையிலேயே நடந்து வந்தாள். தன் விவாக விஷயத்திலும், தன்னுடைய சுயம்வரமே பலித்துவிட்ட குதூகலத்தில், மகத்தான சந்தோஷத்துடன் துள்ளுகிறாள். இன்று, தன்னைப் பார்க்க தாமோதரன் வீட்டவர்கள் வரப் போகிறார்களென்பதை யறிந்து, வீட்டை தேவேந்திர பட்டணத்திற்கு ஒப்பாக அலங்காரம் செய்ததோடு, வருகிற விருந்தினர்களை உபசரித்துச் செய்ய வேண்டிய முறையை, வெகு சிறப்பாக நடத்திப் புகழ் பெற எண்ணி, ஜவுளிக் கடையை ஒன்று அப்படியே கொண்டு வைத்து விட்டாள். வருகிறவர்கள் எத்தனை பெயர்களோ, அத்தனை பேர்களுக்கும் புடவைகள், ரவிக்கைகள், அங்கவஸ்திரம், ஸூட்டு, முதலிய ரகம் வாரியாகக் கொடுத்துப் பெருமை அடைவதற்காகத் தயார் செய்து விட்டாள். தன்னுடைய செல்வத்தைப் பிறர் அறியும் நோக்கத்துடனும் இம்மாதிரி