பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

சாந்தியின் சிகரம்

தரன்: அம்மா… அண்ணா… இவர்கள்தான் ஸ்ரீஉஷாதேவி; நான் தெரிவித்த நாரீமணி; நீங்கள் பார்க்க வந்துள்ள பெண்மணி.. என்று அடுக்கும் போது, உஷா, “நமஸ்காரம்… நமஸ்காரம்…” என்று எல்லோரையும் தானே வரவேற்று அழைத்துச் சென்றாள்.

கல்யாணப் பெண்ணே முதல் முதல் வரவேற்பது என்கிற அதீத நாகரீகத்தைக் கண்டதும், ஒவ்வொருவரும் உள்ளுக்குள் வியப்புற்று, ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இது வரையில், எத்தனையோ படித்த மகா மேதைகள் வீட்டுக் கல்யாணங்களை எல்லாம் பார்த்திருக்கிறோம். அஸல் மேல் நாட்டவர்களைப் போன்ற பழுத்த நாகரீகப் பேர்வழிகளின் வீட்டுக் கல்யாணங்களையும் பார்த்திருக்கிறோம். கல்யாணமாகிய பிறகு, வரவேற்பு நடத்துகையில், தம்பதிகள் வழியிலேயே நின்று, கைகுலுக்கிப் பல்லிளித்து, கரங்குவித்துப் பலவிதமாகச் செய்வதைப் பார்த்திருக்கிறோமே யன்றி, இம்மாதிரி கல்யாணத்திற்காகப் பெண் பார்க்க வரும் போதே, கல்யாண பெண்ணே இப்படி வரவேற்புக் கூறுவதும், கைகுலுக்குவதும் அடேயப்பா! விபரீத நாகரீகமாயிருக்கிறதே! கல்யாண வயது வருவதற்கு முன்பே, பழய காலத்தில் விவாகத்தைச் செய்து விட்டதே, சகல அம்சங்களிலும் வெகு மேன்மையாயிருக்கிறது. வயது வந்த பிறகுதான் விவாகம் செய்ய வேண்டும் என்கிற கால தேச வர்த்தமானத்தை யொட்டி, சட்டம் வந்து விட்டது என்றாலும், அந்தந்த வயது திட்டத்தின்படியாவது, விவாகத்தைச் செய்தால்தான் பெண்களுக்கு சகல விதத்திலும் நன்மையேயன்றி, வீணாக வயதை வளர்த்தி, வேடிக்கைப் பார்க்கும் மிகக் கொடுமையான செய்கையினால், எத்தனை இடங்களில், எத்தனை பெண்களுடைய வாழ்க்கையே பாழாகி விடுகிறது. நிரபராதிகளான பெண்களாயினும், அனாவசியமான அபவா-

சா—6