பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ.103-வது நாவல்

86

பிறகு, மனிதனே மறைந்து விட்டார். எத்தனை ப்ரயத்தனப்பட்டும், அம்மனிதன் மறுபடியும் வராததால், என் குழந்தையின் க்ஷேமத்தைக் கோரி, நான் பெரிய பாடகியாகிக் கச்சேரிகள் செய்தும், சினிமாக்களில் நடித்தும், ஏராளமாய்ச் சம்பாதித்துக் கொண்டு, பெண்ணை மட்டும் படிக்க வைத்து, வ்ருத்திக்குக் கொண்டு வந்தேன். நாங்கள் சமீப காலத்தில்தான், இந்த ஊருக்கு வந்தோம். இந்தப் பாவியை நான் மணந்தது குருநகர் என்ற ஊரிலாகும். பிறகு, சில வருஷத்தில் ஏதோ கொலை கேஸில் அகப்பட்டு தண்டனையடைந்து விட்டதாகக் கேள்விப்பட்டு, அதோடு அம்மனிதனையே மறந்து விட்டேன். நாளை வரையில், குழந்தை உஷாவுக்கு இந்த விஷயங்கள் தெரியாது. நான் சொல்லவில்லை. அண்ணனை தங்கை மணப்பது என்கிற அக்ரமத்திலும் நாங்கள் சிக்கி உழல வேண்டாம். நீங்கள் குழந்தையிடம் ஒன்றுமே சொல்ல வேண்டாம்…

ஸ்ரீதர:- தாயே! இத்தனை அன்பு செலுத்தியுள்ளவர்களின் வாழ்க்கைப் பிணைப்பு அறுபட்டுத் தேறுவதற்கு முக்யமான விஷயங்களைச் சொல்லா விட்டால், என் தம்பி தேற மாட்டான். உங்கள் மகளும் தேற மாட்டார்கள். ஏதோ! கண்மூடித்தனமாய் விவாகத்தைப் பலரறியச் செய்யும் சமயம், இந்த வெட்கக்கேட்டை பலர் முன்பு வெளியாக்காமல், பகவான் இப்போது தெரிவித்து நம்மைக் காப்பாற்றினாரே! இதுவே போதும். இத்தகைய நிலையை நமக்கு பகவான் காட்டாதிருந்தால், நம் கதி என்னவாகும்! நீங்கள் பயப்பட வேண்டாம்.

என்று டாக்டர் சொல்லும் போது, சுந்தராம்பாள் மிகவும் கண்ணீர் பெருக டாக்டரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு, அவர்களை முதலில் எழுந்து போய் விடும்படி வேண்டிக் கொண்டாள். கமலவேணியம்மாளின் நிலைமையை உத்தேசித்து, டாக்டர் தன் சகோதரிகளுடன் வீட்டிற்குச் சென்று விட்டதைக் கண்ட தாமோதரனுக்கு, மகத்தான கோபம் வந்து விட்டது. தன்னை வேண்டு-