பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

சான்றோர் தமிழ்

“ஒருபெட்டை தன் ஆண் அன்றி
வேறொன்றுக் குடன்ப டாதாம்:
ஒரு பெட்டை மத்தாப் பைப்போல
ஒளிபுரிங் திடநின் றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட் டால்தான்
ஒன்று மற் றொன்றை நாடும்,”

—அழகின் சிரிப்பு; புறாக்கள் : 5

ஆணோ பெண்ணோ ஒருவர் இறந்தபின் மற்றவர் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே நேரிய செயல் என்பதனையும் இறுதி அடியிற் புலப்படுத்தி விடுகின்றார்.

கிளியை வருணிக்கப் புகுகின்ற கவிஞர், நெஞ்சத்திலே ஓர் எண்ணமும், நடைமுறை வாழ்வு நலத்திற்காகப் பிறி தொரு செயலுங் கொண்டு இலங்கும் இரட்டை வேடத் தினரைச் சாடக் காணலாம்.

“காட்டினில் திரியும்போது
கிரீச்சென்று கழறு கின்றாய்
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தை போல் கொஞ்சு கின்றாய்
வீட்டிலே துரத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணிர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!”

—அழகின் சிரிப்பு: கிளி; 7.

நிலவைப் பாடிய கவிஞர் பலர் நிலவினைக் காதல் வாழ்வு ஏற்றம் பெற அமையும் பின்புலமாகக் கண்டுள்ளதனைப் பார்க்கலாம். நற்றிணைத் தலைவன் பொருள்வயிற்