பக்கம்:சாமியாடிகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

சு. சமுத்திரம்

ஒருவேளை அவர்கள் இறந்த பிறகும் இருக்கும் மரம். இப்படிப்பட்ட இந்த மரத்திற்குக் கீழே _

அந்த ஆலின் அடிவாரத்தை மாலையிட்டு மரியாதை செலுத்துவதுபோல, பதினெட்டு இருபது பெண் பூக்கள் மாலை வடிவத்தில் அமர்ந்து பீடி இலைகளைக் கத்தரித்தும், சதுரஞ்சதுரமாகச் சித்தரித்தும், வெட்டியும், சுருட்டியும், கட்டியும் கைகளை இயக்கத்தில் விட்டார்கள். செண்பகப் பூப்போன்ற தங்கநிற முத்தம்மா, குண்டுமல்லி போன்ற தடிச்சி வாடாப்பூ, தங்கரளி போல்-பாவாடை குடைபோல் சுழலும் சந்திரா, கூர்மையான பற்களைக் கொண்ட ரோசாப்பூ மாதிரியான ராசகிளி ஆகிய பெண்மாலைக்கு இடையிடையே இட்டு நிரப்பப்பட்ட இலைபோல தங்கம்மா, அலங்காரி ஆகிய நடுத்தரவயதுப் பெண்கள். வானவில்லே பெண் வில்லாய்ப் பிறப்பெடுத்தது போன்ற அந்தப் பகற்பொழுதில் _

பீடி இலைகளைச் சதுரஞ்சதுரமாக வெட்டிக் கொண்டிருந்த சந்திரா, எதிரே பிடி இலைகளைத் தூக்கி நிரப்பி அவசர அவசரமாகச் சுருட்டும் தாயம்மாவைப் பார்த்து அதட்டலான அன்போடு கேட்டாள்.

"என்னத்தே. ஒரு நாளும் இல்லாத திருநாளா இப்படிச் சுத்துற. கை உடம்ப விட்டு கழண்டுடப் போவுது."

"ஒனக்கென்ன பேசமாட்டே. ஒனக்கு பீடி சுத்தறது பொழுது போக்கு. எனக்கோ ஒரு நாள் பொழுதப் போக்குறது. அவனவன் கம்பெனிக் கடைகள்ல தீபாவளி போனஸ், பொங்கல் பரிசுன்னு வாங்குறானுவ... நாம என்னடான்னா பீடி மொதலாளிக்கு போடு வண்டலுன்னு நாமே போனசு கொடுக்கோம். இதைக் கேக்க நாதியில்லே."

தாயம்மா அத்தைக்குப், பாவாடைத் தாவணி சந்திரா பதில் சொல்ல யோசித்தபோது, பிள்ளைக்குட்டி பெற்றாலும், அந்த வார்த்தைகளின் இரண்டாவது வார்த்தைக்கு உரியவள் போல் தோன்றிய அலங்காரி, அலட்டிக்காமலே குறுக்கிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/10&oldid=1243280" இலிருந்து மீள்விக்கப்பட்டது