பக்கம்:சாமியாடிகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

சு. சமுத்திரம்


"அப்படிக் கேளுங்க. இதைவிட மோசமான அர்த்தத்துல பேசப்பபட்ட நாகரிகமான வார்த்தைகள கேட்டுப் பழக்கமுன்னு அர்த்தம். ஒங்களுக்கே தெரியும் நாங்க சைவப் பிள்ள மாருங்க."

"அதனாலதான் என் தமிழ் ஒங்க தமிழைவிட வித்தியாசமா இருக்குதுல்லா..?"

"தமிழ் ஒன்னுதான். கொச்சையா பேசுறோம். அந்தக் கொச்சையுல ஒங்கது முழுப் பச்சை. எங்கது பாதிப்பச்சை. அதை விடுங்க. எங்காட்கள் டவுனுக்குப் போயிட்டாங்க. பிளஸ்டு படிச்ச என்னை, மெட்ராஸ்ல வேலை பார்க்கிற அண்ணன் கூப்பிட்டான். காலேஜ்ல படிக்க வைக்கப் போறார்னு போனேன். சமையல்காரியாய் வேலை கொடுத்தார். அண்ணி சாடை மாடையாய் திட்டி. நேரடியாதிட்டி. எதிர்வீட்டு கிறுக்கன் ஒருத்தனோட காரணமில்லாம சம்பந்தப்படுத்தி, கடைசில நானே இங்கே வரும்படியாய் செய்துட்டாள். அண்ணா ஒப்புக்கு பணம் அனுப்புறார். உப்புக்காவது உதவுது."

"நீயே மெட்ராஸ்ல வேலை தேடி இருக்கலாமே."

"பார்வேட் கம்யூனிட்டின்னு பிறந்துட்ட கிராமத்துப் பெண்ணு எனக்கு சலுகை கிடையாதே. பொதுவா மேல் சாதியில் இருக்கிற பிராமணர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுறதாய் கதை வருது. நாவல் வருது. டி.வியில் நாடகம் வருது. அவங்கள மாதிரியே நாங்களும் ஒரு காலத்துல ஆச்சாரமாய் இருந்தவங்க. இப்போ மேல்சாதி முத்திரையோட மோசமா கஷ்டப்படுறோம். பிராமணர் களுக்காவது நாடு முழுதும் சொல்லிக்க அவங்க சாதி எல்லா மொழிலயும் மாகாணத்துலயும் இருக்குது. எங்க சாதி அப்படி இல்ல. இந்த பிரச்சினையை எடுத்துச் சொல்லவும் நாதியில்ல."

"கடைசில ஒனக்கும் சாதிப் பத்து இருக்கத்தான். செய்யுது."

"எதால பாதிக்கப்படுறோமோ. அதுமேல ஒரு சிந்தன வரது இயற்கை சாதியால பாதிக்கப்படும் போது நான் சாதிக்காரியாய் ஆயிடுறேன். பீடித் தொழிலாளிப் பெண்ணாய் பாதிக்கப்படும்போது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/100&oldid=1243542" இலிருந்து மீள்விக்கப்பட்டது