பக்கம்:சாமியாடிகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

101

அது தன்னையே தனக்கு அடையாளம் காட்டிவிடுகிறது. அந்த அடையாளம் சில சமயம் பிடிப்பதில்லை. பிடிபடுவதும் இல்லை.

திருமலை ஏதோ தப்பு செய்துவிட்டவன் போல், ரஞ்சிதத்திடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினான். தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தையும், பிடறியையும் துடைத்தபடி நடந்தான். காலில்பட்ட ஒரு டப்பாவை தூக்கியெறிந்தான். கண்ணில் பட்ட ஒரு நாயை கல்லால் அடித்தான். எதிரே குசலம் விசாரிக்க வந்தவர்களைக் குற்றவாளிகள் போல் பார்த்தபடி நடந்தான். இந்தத் துளசிங்கம் எப்டி குதிக்கான். அவனை மாதிரி நாமும் குதிக்கனுமுன்னால். ஒரு கடை போடணுமுன்னும். அதுக்காக முருகன், அப்பா மனசுக்குள்ளே போகணுமுன்னும் முருகன் கிட்டே போனால். அந்த சண்டாளப் பயல் அவனை மாதிரியே என்னை ஆக்கிட்டான்."

திருமலை, குரோதங் குரோதமாய் பார்த்து, கோபங் கோபமாய் நடந்து, துளசிங்கம் கடை முன்னால் வந்து நின்றான், ஆங்காரமாக, ஆவேசமாக. அங்கே நின்ற ஒரு சிறுவன் காதில் எதையோ சொன்னான். அந்தச் சிறுவன் அந்தக் கடைக்குப் போய், மீண்டும் திரும்பி வந்து திருமலையிடம் ஒப்பித்தான்.

"ஒமக்கு சிமெண்டு கொடுக்க மாட்டாராம். துளசிங்கம் அண்ணாச்சியே. சொல்லிட்டார். கடைன்னா எல்லாருக்கும் பொதுதான.? ஒமக்கு மட்டும் எப்டி இல்லன்னு சொல்லலாம் மச்சான்.?”

திருமலை அந்தச் சிறுவனைப் பிடித்து தள்ளியபடியே

தலையாட்டினான். பிறகு, துளசிங்கம் கடையை நோக்கி, அழுத்தம் திருத்தமாக நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/103&oldid=1243548" இலிருந்து மீள்விக்கப்பட்டது